பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளலார் ஜெயந்தி: ஜோதி வழிபாடு

Added : அக் 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி சன்மார்க்க சங்கத்தில், வள்ளலாரின், 199வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஜோதி வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.அருட்பெரும் ஜோதி, தனிப்பெருங்கருணை என, ஜோதி வடிவில் இறைவனைக் கண்ட வள்ளலார், அவரது தத்துவங்களின் அடிப்படையில் ஆன்மிக வழிகாட்டும் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.அவரது வழியில் வந்த சன்மார்க்க சங்கங்கள், பல்வேறு ஊர்களில் செயல்பட்டு, அவரது

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சன்மார்க்க சங்கத்தில், வள்ளலாரின், 199வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஜோதி வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.அருட்பெரும் ஜோதி, தனிப்பெருங்கருணை என, ஜோதி வடிவில் இறைவனைக் கண்ட வள்ளலார், அவரது தத்துவங்களின் அடிப்படையில் ஆன்மிக வழிகாட்டும் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.அவரது வழியில் வந்த சன்மார்க்க சங்கங்கள், பல்வேறு ஊர்களில் செயல்பட்டு, அவரது தத்துவங்களை உலகுக்கு தெரிவித்து வருகின்றன.பொள்ளாச்சி சன்மார்க்க சங்கத்தில், அவரது, 199வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. வள்ளலார் இயற்றிய திருவருட்பாவின் ஆறு திருமுறைகள் முற்றோதல் செய்து, அருட்பெரும் ஜோதியின் அடையாளமாக தீபம் ஏற்றி வழிபட்டு, விழா துவங்கப்பட்டது.விழாவுக்கு, பொள்ளாச்சி சன்மார்க்க சங்க தலைவர் ராமகிருஷ்ணன், ஜோதிநகர் சங்க தலைவர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி சங்க செயலாளர் பகவதிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.விழாவில், ரமண சன்மார்க்க சங்கத்தை சேர்ந்த தமயந்தி, தத்துவானசபையை சேர்ந்த ஆத்ம போதகர் மனோகரன் ஆன்மிக சொற்பொறிவு நிகழ்த்தினர். வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு, அவரின் தத்துவங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X