அமைச்சரை விமர்சித்தவர் மீது தாக்குதல் 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு

Added : அக் 08, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம்-அமைச்சரை பற்றி சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, அமைச்சரின் உதவியாளர் மற்றும் தங்கை மீது, இரண்டு ஆண்டுக்கு பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் கடந்த 2019ம் ஆண்டு காங்., ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் கந்தசாமி. இவரை பற்றி 'வாட்ஸ் ஆப்'பில் தவறான செய்தி அனுப்பியதாக,

அரியாங்குப்பம்-அமைச்சரை பற்றி சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, அமைச்சரின் உதவியாளர் மற்றும் தங்கை மீது, இரண்டு ஆண்டுக்கு பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் கடந்த 2019ம் ஆண்டு காங்., ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் கந்தசாமி. இவரை பற்றி 'வாட்ஸ் ஆப்'பில் தவறான செய்தி அனுப்பியதாக, கிருமாம்பாக்கத்தை சேர்ந்த மகேஷ்குமார், 39; என்பவரை, அமைச்சர் கந்தசாமியின் தங்கை முனியம்மாள் வீட்டுக்கு வரவழைத்தார்.உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற மகேஷ்குமாரை, அமைச்சரின் பி.ஏ.,வாக இருந்த மோகன், அமைச்சரின் தங்கை ஆகிய இருவரும் திட்டி, மொபைல் போனால் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தாக்கியதில் காயமடைந்த மகேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடந்த 2019ம் ஆண்டு நவ., 12ம் தேதி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதியாமல் தவிர்த்தனர். மகேஷ்குமார் புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.மனுவை விசாரித்த கோர்ட், மகேஷ்குமாரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதியுமாறு முதலியார்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டது.அதன் பேரில் அமைச்சரின் தங்கை முனியம்மாள், அமைச்சரின் உதவியாளர் மோகன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X