பொது செய்தி

தமிழ்நாடு

நவராத்திரி விழா கொண்டாட்டம் துவக்கம்: கொலு வைத்து கோலாகல வழிபாடு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சக்தியின் வடிவங்களை போற்றி வணங்கும் நவராத்திரி பண்டிகை, நேற்று முதல் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய வழக்கப்படி, கோவில்கள், வீடுகளில் கொலு வைத்தும், நந்தா தீபம் ஏற்றியும் மக்கள் வழிபடுகின்றனர்.இறைவனின் பெண் வடிவமான சக்தியின் ஒன்பது அவதாரங்களையும், குணநலன்களையும் நினைவு கூர்ந்து போற்றி வழிபடும் வகையில், நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள், மாலை
 நவராத்திரி விழா கொண்டாட்டம் துவக்கம்: கொலு வைத்து கோலாகல வழிபாடு

சக்தியின் வடிவங்களை போற்றி வணங்கும் நவராத்திரி பண்டிகை, நேற்று முதல் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய வழக்கப்படி, கோவில்கள், வீடுகளில் கொலு வைத்தும், நந்தா தீபம் ஏற்றியும் மக்கள் வழிபடுகின்றனர்.இறைவனின் பெண் வடிவமான சக்தியின் ஒன்பது அவதாரங்களையும், குணநலன்களையும் நினைவு கூர்ந்து போற்றி வழிபடும் வகையில், நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஒன்பது நாட்கள், மாலை துவங்கி இரவு வரை இந்த வழிபாடு நடக்கிறது.பண்டிகையின் இறுதி நாள், கல்வி, கலைகளின் வடிவான சரஸ்வதி பூஜையாகவும், தினசரி வாழ்வில் பயன்படும் கருவிகளுக்கு ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.இதையடுத்து, கோவில்களில் நந்தா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம், வரும் ஒன்பது நாட்களும் அணையாமல் எரியும். மேலும், கொலுப்படிக்கட்டுகள் அமைத்து, கொலு பொம்மைகள் வைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மேல் படியில் கடவுள் உருவங்கள், அதற்கடுத்த படியில் ஞானிகள், மகான்கள், அடுத்தடுத்த படிகளில், விலங்குகள், தாவரங்கள் என்று இயற்கையின் படி நிலையை குறிக்கும் தத்துவார்த்தமாக அமைக்கப்படுகிறது.பொள்ளாச்சி பகுதியில், மக்கள் தங்கள் வீடுகளில் விதவிதமான கொலு அமைத்துள்ளனர். கோவில்களிலும், கொலுப்படி அமைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியிலுள்ள அம்மன் கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி, தினமும் ஒரு அவதாரத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
உடுமலை
உடுமலை சுற்றுப்பகுதி கோவில் மற்றும் வீடுகளில், நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், நேற்று முன்தினம், கொலு வைத்தனர். இதில், முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை அழைத்தும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் அருளைப்பெறவும், போற்றி வழிபடுகின்றனர்.
இதற்காக, வீடுகளில், பெண்கள் விரதம் இருந்து, கொலு படிகள் அமைத்து, பொம்மைகளை அலங்கரித்து வைத்துள்ளனர்.தசாவதாரம், திருமணம், அஷ்டலட்சுமி, ஆண்டாள், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி என, பல்வேறு வகையாக பொம்மைகளை அலங்கரித்து, மங்கள பொருட்கள் வைத்து, அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்கின்றனர்.
வால்பாறை
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில்,நவராத்திரி விழாவையொட்டி, கொலு வைக்கப்பட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது.முதல் நாளான நேற்று, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்- நிருபர் குழு -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X