சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூப்பர் மார்க்கெட் மேற்கூரையை உடைத்து ரூ.75 ஆயிரம் திருட்டு

Added : அக் 08, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில் சூப்பர் மார்க்கெட்டில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 25; இவருக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், செஞ்சி ரோட்டில் சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று காலை 7:30 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தபோது, மேற்கூரையின் சிமென்ட் ஷீட் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த

திண்டிவனம்-திண்டிவனத்தில் சூப்பர் மார்க்கெட்டில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 25; இவருக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், செஞ்சி ரோட்டில் சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று காலை 7:30 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தபோது, மேற்கூரையின் சிமென்ட் ஷீட் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த ரூ.75 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது.மேலும், மர்ம நபர்கள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் கழற்சி எடுத்துச் சென்றுள்ளனர். போலீஸ் மோப்ப நாய் வந்தால் கண்டுபிடிக்காமல் இருக்க துணிகளுக்கு பயன்படுத்தப்படும் கம்போர்ட்டை கடை முழுவதும் தெளித்து விட்டுச் சென்றுள்ளனர்.தகவலறிந்த ரோஷணை போலீசார் மற்றும் விழுப்புரம் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் சாய்னா வரவழைக்கப்பட்டது.புகாரின் பேரில், ரோஷணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X