பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி

Added : அக் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.மாவட்ட தேர்தல் பார்வையாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். இதில், நாளை 9ம் தேதி காணை, கோலியனுார், மயிலம், மரக்காணம், வல்லம் மற்றும்

விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.மாவட்ட தேர்தல் பார்வையாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். இதில், நாளை 9ம் தேதி காணை, கோலியனுார், மயிலம், மரக்காணம், வல்லம் மற்றும் மேல்மலையனுார் ஆகிய 6 ஒன்றியங்களில் 1,379 ஓட்டுச்சாவடிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவிற்கு 11 ஆயிரத்து 411 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு, ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி கணினி குலுக்கல் முறையில் நடந்தது.இந்த ஓட்டுப்பதிவு அலுவலர்கள் இன்று 8ம் தேதி காலை உரிய நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய பயிற்சி மையங்களுக்குச் சென்று பணி உத்தரவு நகல்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X