விவசாய நிலம் வழியாக சடலம் எடுத்துச் செல்லும் அவலம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல வழியில்லாமல் விவசாய நிலம் வழியாக எடுத்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் மதுரா தொட்டிமேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சுடுகாடு

திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல வழியில்லாமல் விவசாய நிலம் வழியாக எடுத்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் மதுரா தொட்டிமேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாததால் ஏரிக்கரையில் அடக்கம் செய்கின்றனர்.தற்போது அந்த ஏரிக்கரைக்குச் செல்ல வழியில்லாமல் அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் வழியாக உடல்களை எடுத்துச் செல்லும் நிலை உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சுடுகாட்டிற்குச் செல்ல பாதை ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X