பறக்கும் படை சோதனை ரூ.2.54 லட்சம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை சோதனை ரூ.2.54 லட்சம் பறிமுதல்

Added : அக் 08, 2021
Share
சின்னசேலம்-சின்னசேலம் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மரவானத்தம் பிரிவு ரோட்டில் கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக கள்ளக்குறிச்சியிலிருந்து -

சின்னசேலம்-சின்னசேலம் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மரவானத்தம் பிரிவு ரோட்டில் கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக கள்ளக்குறிச்சியிலிருந்து - சின்னசேலம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.சின்னசேலத்தைச் சேர்ந்த அருள்பிரகாஷ், 28; என்பவர் உரிய ஆவணம் இல்லாமல், 2 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாய் கொண்டு செல்வது தெரியவந்தது.இதையடுத்து, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சின்னசேலம் ஒன்றிய தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பழனிவேலிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X