தேர்தல் பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் ஊழியர்கள் அவதி

Added : அக் 08, 2021
Share
Advertisement
தியாகதுருகம்-உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு கிராமங்களுக்குச் சென்ற அரசு ஊழியர்கள் தங்குவதற்கான அடிப்படை வசதியின்றியும், நள்ளிரவில் வீடு திரும்புவதற்கு வாகன வசதியின்றியும் கடும் அவதியடைந்தனர்.உள்ளாட்சித் தேர்தல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு கடந்த 6ம் தேதி

தியாகதுருகம்-உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு கிராமங்களுக்குச் சென்ற அரசு ஊழியர்கள் தங்குவதற்கான அடிப்படை வசதியின்றியும், நள்ளிரவில் வீடு திரும்புவதற்கு வாகன வசதியின்றியும் கடும் அவதியடைந்தனர்.உள்ளாட்சித் தேர்தல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு கடந்த 6ம் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 5ம் தேதியே ஓட்டுச்சாவடி உள்ள கிராமங்களுக்குச் சென்றனர். அன்று காலையிலிருந்து இரவு வரை தொடர் மழை பெய்ததால் பலரும் பைக்கில் செல்ல முடியாமல், பஸ், ஆட்டோக்கள் மூலம் மிகுந்த சிரமத்துடன் ஓட்டுச்சாவடிக்கு சென்றனர்.பல கிராமங்களில் தங்குவதற்கான அடிப்படை வசதியின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சில இடங்கள் குறித்த நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் இரவு 8:00 மணிக்கு மேலும் ஓட்டுப்பதிவு நடந்தது.அதைத்தொடர்ந்து ஓட்டுப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் வாகனம் வருவதற்கு பல இடங்களில் நள்ளிரவு 1:00 மணியைத் தாண்டியது.பெண் ஊழியர்களும் நள்ளிரவு வரை ஓட்டு சாவடியில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டதால் அதற்கு மேல் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.ஓட்டுப்பெட்டியை எடுத்துச் சென்றதும், ஓட்டுச்சாவடி அலுவலர்களை தனி வாகனம் மூலம் அருகில் உள்ள நகரத்தில் விட ஏற்பாடு செய்திருக்கலாம்.இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை 9ம் தேதி கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களில் நடைபெற உள்ளது. அப்போதாவது வாகன வசதி, உணவு, தங்குவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் பணி மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X