சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குற்றவாளிகளுக்கு ஆதரவு

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை;வழக்கு பதிவில் தாமதம், குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட காரணங்களுக்காக பெண் இன்ஸ்பெக்டரை கோவை டி.ஐ.ஜி., முத்துசாமி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.கோவை மாவட்ட போலீசில், தீவிர குற்றப்பிரிவில்(சீரியஸ் கிரைம் ஸ்குவாடு) இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கலையரசி,43. இவர் இதற்கு முன் கோவை மாநகர போலீஸ் பொருளாதார குற்றப்பிரிவில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.அப்போது,
 குற்றவாளிகளுக்கு ஆதரவு

கோவை;வழக்கு பதிவில் தாமதம், குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட காரணங்களுக்காக பெண் இன்ஸ்பெக்டரை கோவை டி.ஐ.ஜி., முத்துசாமி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.கோவை மாவட்ட போலீசில், தீவிர குற்றப்பிரிவில்(சீரியஸ் கிரைம் ஸ்குவாடு) இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கலையரசி,43. இவர் இதற்கு முன் கோவை மாநகர போலீஸ் பொருளாதார குற்றப்பிரிவில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.அப்போது, மோசடி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது காலதாமதமாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளுக்கு சாதமாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்திய டி.ஐ.ஜி., முத்துசாமி, இன்ஸ்பெக்டர் கலையரசியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில், கலையரசி நேற்று மாலை, பாப்பநாயக்கன்பாளையம் பழையூரில் உள்ள தனது வீட்டில், கெரசின் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். அருகில் இருந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டனர். இதில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X