தமிழ்நாடு

1.22 லட்சம்: முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப்போட தவறியவர்கள்...முகையூர் ஒன்றியத்தில் குறைந்தபட்ச ஓட்டுப்பதிவு

Added : அக் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 674 பேர் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்யவில்லை.விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம், செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடந்தது.இதில், 16 மாவட்ட
 1.22 லட்சம்: முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப்போட தவறியவர்கள்...முகையூர் ஒன்றியத்தில் குறைந்தபட்ச ஓட்டுப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 674 பேர் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்யவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம், செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடந்தது.இதில், 16 மாவட்ட கவுன்சிலர்கள், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 372 கிராம ஊராட்சித் தலைவர்கள், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3,297 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது.இத்தேர்தலில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 919 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 79 ஆயிரத்து 475 பெண் வாக்காளர்கள், 65 மூன்றாம் பாலினத்தவர் என 7 லட்சத்து 54 ஆயிரத்து 459 பேர் ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.இதில், செஞ்சி ஒன்றியத்தில் 59 ஆயிரத்து 564 ஆண்களில் 48 ஆயிரத்து 474 பேர், 60 ஆயிரத்து 71 பெண்களில் 50 ஆயிரத்து 369 பேர் என 98 ஆயிரத்து 843 பேர் ஓட்டு போட்டனர். மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் ஓட்டு போடவில்லை.கண்டமங்கலத்தில் 53 ஆயிரத்து 617 ஆண்களில் 46 ஆயிரத்து 54 பேர், 57 ஆயிரத்து 80 பெண்களில் 48 ஆயிரத்து 309 பேர் என 94 ஆயிரத்து 363 பேர் ஓட்டு போட்டனர். மூன்றாம் பாலினத்தவர் 6 பேர் ஓட்டு போடவில்லை.முகையூரில் 61 ஆயிரத்து 36 ஆண்களில் 48 ஆயிரத்து 395 பேர், 60 ஆயிரத்து 88 பெண்களில் 47 ஆயிரத்து 617 பேர் என 96 ஆயிரத்து 12 பேர் ஓட்டு போட்டனர். மூன்றாம் பாலினத்தவர் 13 பேர் ஓட்டு போடவில்லை.ஒலக்கூரில் 34 ஆயிரத்து 628 ஆண்களில் 30 ஆயிரத்து 353 பேர், 35 ஆயிரத்து 19 பெண்களில் 29 ஆயிரத்து 786 பேர், மூன்றாம் பாலித்தவர்களில் 3 பேரில் ஒருவர் என 60 ஆயிரத்து 140 பேர் ஓட்டு போட்டனர்.வானுாரில் 61 ஆயிரத்து 953 ஆண்களில் 54 ஆயிரத்து 100 பேர், 62 ஆயிரத்து 796 பெண்களில் 54 ஆயிரத்து 352 பேர், 10 மூன்றாம் பாலினத்தவர்களில் ஒருவர் என ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 453 பேர் ஓட்டு போட்டனர்.விக்கிரவாண்டியில் 49 ஆயிரத்து 737 ஆண்களில் 42 ஆயிரத்து 47 பேர், 51 ஆயிரத்து 461 பெண்களில் 43 ஆயிரத்து 213 பேர், 14 மூன்றாம் பாலினத்தவர்களில் 2 பேர் என 85 ஆயிரத்து 262 பேர் ஓட்டு போட்டனர்.திருவெண்ணெய்நல்லுாரில் 54 ஆயிரத்து 384 ஆண்களில் 45 ஆயிரத்து 26 பேர், 52 ஆயிரத்து 960 பெண்களில் 43 ஆயிரத்து 684 பேர், 11 மூன்றாம் பாலினத்தவர்களில் 2 பேர் என 88 ஆயிரத்து 710 பேர் ஓட்டு போட்டனர்.ஏழு ஒன்றியங்களிலும் 7 லட்சத்து 54 ஆயிரத்து 459 வாக்காளர்களில் 6 லட்சத்து 31 ஆயிரத்து 783 பேர் ஓட்டு போட்டனர். மீதமுள்ள ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 674 பேர் ஓட்டு போடவில்லை.இதேபோன்று, பெண்களைவிட 2,881 ஆண்கள் குறைவாக ஓட்டு போட்டுள்ளனர்.அதன்படி, செஞ்சியில் 82.40, முகையூரில் 79.14, கண்டமங்கலத்தில் 85.11, விக்கிரவாண்டியில் 84.24, ஒலக்கூரில் 86.38, திருவெண்ணெய்நல்லுாரில் 82.50, வானுாரில் 86.93 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியது.

இது மாவட்டத்தில் சாரசரியாக 83.65 சதவீத ஓட்டுப்பதிவாகும். மாவட்டத்திலேயே வானுாரில் அதிகபட்சமாகவும், முகையூரில் குறைந்தபட்சமாகவும் ஓட்டுப்பதிவு இருந்தது.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் காணை, கோலியனுார், மேல்மலையனுார், வல்லம், மரக்காணம், மயிலம் ஒன்றியங்களில் நாளை 9ம் தேதி இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்ததால், காலை முதல் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
08-அக்-202114:38:29 IST Report Abuse
duruvasar அவர்கள் கையால் போடவில்லை என்று வேண்டுமானால் நெருடல் இருக்கும். நடப்பது யாருடைய ஆட்சி என்பதை புரிந்து ஆறுதல் அடையுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X