அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோவில் வழிபாட்டிற்கு தடை என்பது வெட்கக்கேடானது, நயவஞ்சகமானது'

Added : அக் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருவண்ணாமலை;''கோவில்களில் வழிபாட்டிற்கு தடை என்பது வெட்கக்கேடானது, நயவஞ்சகமானது,'' என, பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் கருநாகராஜன் கூறினார்.திருவண்ணாமலையில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு அனைத்து துறைகளையும் செயல்பட வைத்திருக்கிறது, கொரோனா உச்சத்தில் இருந்தபோது, எல்லா கோவில்களும் அடைக்கப்பட்டது, மக்கள் ஏற்று கொண்டனர். இன்று அனைத்து அரசு துறைகள்,

திருவண்ணாமலை;''கோவில்களில் வழிபாட்டிற்கு தடை என்பது வெட்கக்கேடானது, நயவஞ்சகமானது,'' என, பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் கருநாகராஜன் கூறினார்.திருவண்ணாமலையில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு அனைத்து துறைகளையும் செயல்பட வைத்திருக்கிறது, கொரோனா உச்சத்தில் இருந்தபோது, எல்லா கோவில்களும் அடைக்கப்பட்டது, மக்கள் ஏற்று கொண்டனர். இன்று அனைத்து அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பஸ் போக்குவரத்து, ரயில், ஆட்டோ, டாக்ஸி, சினிமா தியேட்டர், டாஸ்மாக், பள்ளிக்கூடங்கள், கல்லுாரிகள் என எல்லாம், திறக்கப்பட்ட பிறகு, கோவில்களுக்கு மட்டும் தடை என்பது வெட்கக்கேடானது. இது நயவஞ்சமானது.அனைத்து நாட்களிலும் கோவில்கள் மட்டுமின்றி மசூதிகள், சர்ச்சுகள் திறக்கப்பட வேண்டும். அனைத்து பக்தர்கள் மனது புண்படக்கூடாது. இதை வலியுறுத்தி மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி, 12 இடங்களில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில், இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு திருந்த வேண்டும், தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.சட்டவிரோத கும்பலை பிடிப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் பிடிவாதமாக இருங்கள். மக்களின் பக்தி உணர்வுகளை தடுப்பதில், மன வேதனைபடுத்துவதால், தமிழக அரசுக்கு கேடுகாலம் என்பதைத்தான் இந்த நேரத்தில் சொல்லி கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - tirunelveli,இந்தியா
08-அக்-202105:05:10 IST Report Abuse
muthu God is everywhere , pray God from your inner heart. Happy to note God is getting daily Pooja by priest.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
08-அக்-202104:42:19 IST Report Abuse
John Miller மக்கள் மன வேதனையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு களிம்பு போட்டு ஆற்ற வேண்டியது தானே போராட்டம் எதற்கு? பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எப்போது போராட்டம் நடத்தப் போகிறீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X