பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலால் பூசணி வியாபாரம் டல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
திண்டிவனம்-ஊரக உள்ளாட்சித் தேர்தலால் திண்டிவனத்தில் பூசணிக்காய் வியாபாரம் டல் அடித்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.புரட்டாசி அமாவாசை தினமான நேற்று முன்தினம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்துக்குப்பட்ட பகுதிகளில் நடந்தது.ஓட்டுப்பதிவு காரணமாக, திண்டிவனம், வானுார், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிகளில் பெரும்பாலான

திண்டிவனம்-ஊரக உள்ளாட்சித் தேர்தலால் திண்டிவனத்தில் பூசணிக்காய் வியாபாரம் டல் அடித்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.புரட்டாசி அமாவாசை தினமான நேற்று முன்தினம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்துக்குப்பட்ட பகுதிகளில் நடந்தது.ஓட்டுப்பதிவு காரணமாக, திண்டிவனம், வானுார், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிகளில் பெரும்பாலான கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. புரட்டாசி அமாவாசையையொட்டி வியாபாரிகள் கடை முன் திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைப்பது வழக்கம்.ஆனால், நேற்று முன்தினம் தேர்தல் நடந்ததால் பெரும்பாலான வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு குவிக்கப்பட்டிருந்த வெள்ளை பூசணிக்காய்கள் விற்பனையாகாமல் தேங்கியது.கடந்த அமாவாசை தினத்திற்கு ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்ற பூசணிக்காய்கள் புராட்டாசி அமாவாசை தினமான நேற்று ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்றும் வாங்க ஆளில்லாமல் கடைகளில் தேங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X