பயங்கரவாதத்துக்குத் துணைபோவதால் பாக்., தனித்து விடப்படவேண்டும்: முன்னாள் அமெரிக்க ஆலோசகர்

Added : அக் 08, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
வாஷிங்டன்: பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதால் பாக்., தனித்து விடப்படவேண்டும் என டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் ஓய்வு பெற்ற முன்னாள் ஜெனரல் ஹெச் ஆர் மெக்மாஸ்டர். இவர் தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விமர்சித்து வெளியிட்ட கருத்து வைரலாகி வருகிறது.முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவை காஷ்மீர்
Pakistan, Isolation, Terror Support

வாஷிங்டன்: பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதால் பாக்., தனித்து விடப்படவேண்டும் என டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஓய்வு பெற்ற முன்னாள் ஜெனரல் ஹெச் ஆர் மெக்மாஸ்டர். இவர் தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விமர்சித்து வெளியிட்ட கருத்து வைரலாகி வருகிறது.

முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவை காஷ்மீர் விவகாரத்தில் இம்ரான் கான் விமர்சித்துப் பேசி இருந்தார். இந்த கூட்டத்தில் அவர் பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளாகியது. இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்கிறது என்று கடுமையாக விமர்சித்து இருந்தது. இதனை அமெரிக்காவும் அமோதித்தது.


latest tamil news


காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்பதால் இதில் ஐநா தலையிடவில்லை. ஆனால் இம்ரான் கான் தொடர்ந்து ஐநா கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசி வருவதால் இந்தியா-பாகிஸ்தான் மோதல் ஐநா., கூட்டத்திலும் எதிரொலித்தது.

லஷ்கர்-இ-தொய்பா, தாலிபான் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரவு அளித்து அடைக்கலம் கொடுத்துவருவதாக நீண்ட காலமாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தனர்.

தாலிபான்களுக்கு பாகிஸ்தான் மறைமுக ஆதரவு அளிப்பதால் உலக நாடுகள் பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்திக்கொண்டு அந்நாட்டை தனித்து விடவேண்டும் என்று கூறியுள்ளார் மெக் மாஸ்டர். இவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ஆட்சி காலத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
08-அக்-202114:53:09 IST Report Abuse
Vena Suna அவனுக்கு அவன் பாஷை தான் புரியும். அவன் நாட்டில் தீவிரவாதம் உலக நாட்கள் பண்ணனும்.
Rate this:
Cancel
canchi ravi - Hyderabad,இந்தியா
08-அக்-202114:37:58 IST Report Abuse
canchi ravi அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் கூறியதை நல்ல 'சிரிப்பாக' கணித்து பரிசளிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-அக்-202113:13:15 IST Report Abuse
Ramesh Sargam இப்ப மத்தம் என்னவாம். சீனா போன்ற ஒரு சில நாடுகளை தவிர்த்து யாரும் பாகிஸ்தான் பக்கம் தலை கூட வைத்து படுப்பதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X