பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களில் நடந்த முதல் கட்ட தேர்தலில் 84 ஆயிரத்து 80 பேர் ஓட்டு போடவில்லை.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.இந்த தேர்தலில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 713 ஆண்கள், 2 லட்சத்து 33 ஆயிரத்து 880 பெண்கள், 85

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களில் நடந்த முதல் கட்ட தேர்தலில் 84 ஆயிரத்து 80 பேர் ஓட்டு போடவில்லை.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.இந்த தேர்தலில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 713 ஆண்கள், 2 லட்சத்து 33 ஆயிரத்து 880 பெண்கள், 85 திருநங்கைகள் என மொத்தம் 4 லட்சத்து 73 ஆயிரத்து 678 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.இதில், திருக்கோவிலுார் ஒன்றியத்தில் 60 ஆயிரத்து 94 ஆண்களில் 49 ஆயிரத்து 742 பேர், 58 ஆயிரத்து 867 பெண்களில் 48 ஆயிரத்து 646 பேர் என 98 ஆயிரத்து 388 பேர் ஓட்டு பதிவு செய்துள்ளனர். திருநங்கைகள் 15 பேரும் ஓட்டளிக்கவில்லை. திருநாவலுாரில் 51 ஆயிரத்து 210 ஆண்களில் 43 ஆயிரத்து 464 பேர், 49 ஆயிரத்து 779 பெண்களில் 42 ஆயிரத்து 641 பேர் என 86 ஆயிரத்து 105 பேர் ஓட்டளித்தனர். திருநங்கைகள் 21 பேரும் ஓட்டளிக்கவில்லை.உளுந்துார்பேட்டையில், 60 ஆயிரத்து 727 ஆண்களில் 48 ஆயிரத்து 546 பேர், 59 ஆயிரத்து 802 பெண்களில் 49 ஆயிரத்து 654 பேர், திருநங்கை ஒருவர் என மொத்தம் 98 ஆயிரத்து 201 பேர் ஓட்டளித்தனர்.ரிஷிவந்தியத்தில் 67 ஆயிரத்து 682 ஆண்களில் 53 ஆயிரத்து 570 பேர், 65 ஆயிரத்து 432 பெண்களில் 53 ஆயிரத்து 333 பேர், திருநங்கை ஒருவர் என ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 904 பேர் ஓட்டளித்தனர். மொத்தம் உள்ள 4 லட்சத்து 73 ஆயிரத்து 678 வாக்காளர்களில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 598 பேர் ஓட்டளித்துள்ளனர். மொத்த ஓட்டு சதவீதம் 82.25 ஆகும். முதல்கட்ட தேர்தலில் 84 ஆயிரத்து 80 பேர் ஓட்டு பதிவு செய்யாமல், தங்களது ஜனநாயக கடைமையாற்றத் தவறினர்.திருக்கோவிலுார் ஒன்றியத்தில் 82.70 சதவீதம், உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் 81.46 சதவீதம் பதிவாகியது. அதிகபட்சமாக திருநாவலுார் ஒன்றியத்தில் 85.24 சதவீதமும், குறைந்தபட்சமாக ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 80.29 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.வரும் 9ம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து வகை ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X