விழுப்புரம் மாவட்டத்தில் 2ம் கட்டமாக 2,800 பதவியிடங்களுக்கு நாளை தேர்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் 2ம் கட்டமாக 2,800 பதவியிடங்களுக்கு நாளை தேர்தல்

Added : அக் 08, 2021
Share
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 2,800 பதவியிடங்களுக்கு இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை 9ம் தேதி நடக்கிறது. இதில், காணை, கோலியனுார், மயிலம், மேல்மலையனுார், மரக்காணம், வல்லம் ஆகிய 6 ஒன்றியங்களில் தேர்தல் நடக்கிறது.இத்தேர்தலில், 12 மாவட்ட கவுன்சிலருக்கு 82 பேர், 135 ஊராட்சி ஒன்றிய

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 2,800 பதவியிடங்களுக்கு இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை 9ம் தேதி நடக்கிறது. இதில், காணை, கோலியனுார், மயிலம், மேல்மலையனுார், மரக்காணம், வல்லம் ஆகிய 6 ஒன்றியங்களில் தேர்தல் நடக்கிறது.இத்தேர்தலில், 12 மாவட்ட கவுன்சிலருக்கு 82 பேர், 135 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு 625 பேர், 316 கிராம ஊராட்சி தலைவருக்கு 1,239 பேர், 2,337 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 7,009 பேர் என மொத்தம் 2,800 பதவியிடங்களுக்கு 8,955 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான ஓட்டுப்பதிவு 1,379 ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கிறது.இரண்டாம் கட்ட தேர்தலில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 501 ஆண்கள், 3 லட்சத்து 16 ஆயிரத்து 640 பெண்கள், 87 மூன்றாம் பாலினத்தவர்கள் என 6 லட்சத்து 29 ஆயிரத்து 228 பேர் ஓட்டுப் போட உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X