ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே டெக்னீசியன் பணி காலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே டெக்னீசியன் பணி காலி

Added : அக் 08, 2021
Share
நடுவீரப்பட்டு-நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே டெக்னீசியன் இல்லாததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம், விலங்கல்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு எக்ஸ்ரே

நடுவீரப்பட்டு-நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே டெக்னீசியன் இல்லாததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம், விலங்கல்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு எக்ஸ்ரே டெக்னீசியன் பணியில் இல்லை. இங்கிருந்த டெக்னீசியன் பல மாதங்களுக்கு முன் கடலுார் தலைமை மருத்துவமனைக்கு தற்காலிக பணிக்காக அழைத்தனர். இதனால் நடுவீரப்பட்டில் ஆள் இல்லாததால் எக்ஸ்ரே எடுக்க கடலுார் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் எக்ஸ்ரே மிஷின் பயன்படுத்தாமல் வீணாகிறது. இங்கு எக்ஸ்ரே டெக்னீசியனை மீண்டும் பணியமர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X