சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகம் முற்றுகை விருத்தாசலம் அருகே பரபரப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே தலைவரை காணவில்லை என கூறி, கிராம மக்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ஊராட்சியில் பழைய காலனியைச் சேர்ந்த 7, 9வது வார்டு மக்களுக்கு, 100 நாள் வேலை வழங்க வேண்டும். ஊராட்சி தலைவர் கணவரின் தலையீட்டை தடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்

விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே தலைவரை காணவில்லை என கூறி, கிராம மக்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ஊராட்சியில் பழைய காலனியைச் சேர்ந்த 7, 9வது வார்டு மக்களுக்கு, 100 நாள் வேலை வழங்க வேண்டும். ஊராட்சி தலைவர் கணவரின் தலையீட்டை தடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி கடந்த வாரம் விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது வரை எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை 10:00 மணியளவில், கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, குப்பந்ததம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர்கள் ஆதி, பாக்கியராஜ் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X