பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கடலூர்-சென்னையில் நடக்கும் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, சீருடை வழங்கப்பட்டது.சென்னையில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி, நேற்று (7ம் தேதி) துவங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. இதில், கடலுார் மாவட்ட கூடைபந்து கழகம் சார்பில் 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு அணி விளையாடுகிறது.இவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி அண்ணா

கடலூர்-சென்னையில் நடக்கும் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, சீருடை வழங்கப்பட்டது.சென்னையில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி, நேற்று (7ம் தேதி) துவங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. இதில், கடலுார் மாவட்ட கூடைபந்து கழகம் சார்பில் 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு அணி விளையாடுகிறது.இவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கினார். மூத்த துணை செயலாளர் இளங்கோவன், பொருளாளர் பாலமுரளி, இணை செயலாளர்கள் சிட்டிபாபு, சகாயசெல்வன் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா பங்கேற்று வீரர், வீராங்கனைகளுக்கு இலவச சீருடை வழங்கினார்.தேசிய விளையாட்டு வீரர் தங்கம், தமிழ்வாணன், நடராஜன், அப்துல்கனி, நெடுஞ்செழியன், போலீஸ் ரமேஷ், அப்துல்லா வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி பேசினர். பயிற்சியாளர்கள் கோவிந்தன், லாவண்யா, விஜயகுமார், மேலாளர்கள் மோகன்குமார், வினோத்குமார், மணிகண்டன், பாலாஜி, செங்குட்டுவன் கலந்து கொண்டனர். பின், வீரர், வீராங்கனைகள் வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டனர். இணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X