பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., வேட்பாளர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
பண்ருட்டி-பண்ருட்டி ஒன்றியம் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க.,வேட்பாளர் மச்சகாந்தி அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலையில் நேற்று இணைந்தார்.பண்ருட்டி ஒன்றியம் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நாளை 9 ம்தேதி நடக்கிறது. அ.தி.மு.க.,சார்பில் ஆதிலட்சுமி, தி.மு.க.,சார்பில் ஜெயபிரியா, தே.மு.தி.க.சார்பில் ராதிகா,

பண்ருட்டி-பண்ருட்டி ஒன்றியம் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க.,வேட்பாளர் மச்சகாந்தி அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலையில் நேற்று இணைந்தார்.பண்ருட்டி ஒன்றியம் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நாளை 9 ம்தேதி நடக்கிறது. அ.தி.மு.க.,சார்பில் ஆதிலட்சுமி, தி.மு.க.,சார்பில் ஜெயபிரியா, தே.மு.தி.க.சார்பில் ராதிகா, பா.ம.க.சார்பில் மச்சகாந்தி மணிவண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நேற்று முன்னாள் அமைச்சர் சம்பத் முன்னிலையில் பா.ம.க., வேட்பாளர் மச்சகாந்தி, அவரது கணவர் பா.ம.க.,இளைஞரணி இணை செயலர் மணிவண்ணன், அரவிந்த், அப்பு உள்ளிட்டோர் பா.ம.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் குமார், தொரப்பாடி பேரூர் செயலர் கனகராஜ், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் கந்தன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, செல்வராஜ், வக்கீல் ஆனந்தன்.மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், மேல்அருங்குணம் கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் லட்சுமிகாந்தன், சேனாதிபதி, முன்னாள் ஊராட்சி செயலர் ரமேஷ், ஆதிலட்சுமி லட்சுமிநாராயணன், கொக்குப்பாளையம் சிவா, பாலா, அவியனுார் பரந்தாமன், பலாப்பட்டு பாஸ்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X