ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு; மத்திய அரசுக்கு கோர்ட் கேள்வி
ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு; மத்திய அரசுக்கு கோர்ட் கேள்வி

ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு; மத்திய அரசுக்கு கோர்ட் கேள்வி

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி : மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்கு வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாய் நிர்ணயித்துள்ளது பற்றி மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.'மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 'நீட்' தேர்வு அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதமும் இதர
ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு; மத்திய அரசுக்கு கோர்ட் கேள்வி

புதுடில்லி : மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்கு வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாய் நிர்ணயித்துள்ளது பற்றி மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.



'மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 'நீட்' தேர்வு அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதமும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் வழங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்தது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான வருமான உச்ச வரம்பாக ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.


latest tamil news


மத்திய அரசின் இடஒதுக்கீடு அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், நாகரத்னா, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.



அப்போது நீதிபதிகள் 'மருத்துவ படிப்பு இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பு ஆண்டுக்கு 8 லட்ச ரூபாயாக நிர்ணயித்துள்ளது பற்றி மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (17)

Dharmavaan - Chennai,இந்தியா
08-அக்-202115:06:53 IST Report Abuse
Dharmavaan மற்ற ஒதுக்கீடு பற்றி ஏன் பேசவில்லை.கொலீஜியும் முறை ஒழிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-அக்-202112:22:50 IST Report Abuse
duruvasar பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கீரீமி லேயர் பிரிவு என்பதை கொண்டுவருவே கூடாது என்பதுதான் சமூகநீதி என பேசப்படுகிறதே. அப்ப இவிகளுக்கு 8 லட்சம் என்று சொன்னால் சமூக அநீதி கணக்கில் வருகிறதா எசமான் ? அப்படியே இந்த முற்படுத்த பிற்படுத்த பட்டியலை தயாரித்த கம்பனி ஓனரையும் வழக்கில் மனுதாரராக சேர்த்துக்கொள்ளுங்கள்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
08-அக்-202113:15:19 IST Report Abuse
Dhurvesh8 லட்சம் வாங்குகிறவன் ஏழை லிஸ்டில், அதுவும் 2 ஏக்கர் வெச்சிருக்கிறவன் உனக்கு ஏழை, அந்த 2 ஏக்கரை நீங்கள் எப்படி வாங்கினீர்கள் என்று நாங்கள் பேசத்தொடங்கினாள் அனாச்சாரம் ஆகிவிடும்,...
Rate this:
Yesappa - Bangalore,இந்தியா
11-அக்-202119:04:28 IST Report Abuse
Yesappaலட்சம் கோடி ஊழல் செய்தவர் - சமூகநீதி யில் வருகிறார் கொடுமை...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-அக்-202110:55:27 IST Report Abuse
duruvasar பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கீரீமி லேயர் பிரிவு என்பதை கொண்டு வருவே கூடாது என்பதுதான் சமூகநீதி என பேசப்படுகிறதே. அப்ப இவிகளுக்கு 8 லட்சம் என்று சொன்னால் சமூக அநீதி கணக்கில் வருகிறதா எசமான் ? அப்படியே இந்த முற்படுத்த பிற்படுத்த பட்டியலை தயாரித்த கம்பனி ஓனரையும் வழக்கில் மனுதாரராக சேர்த்துக்கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X