பொது செய்தி

இந்தியா

தொழிலதிபர்கள், முன்னாள் முதல்வர் எடியூரப்பா உதவியாளர் வீடு உட்பட பல இடங்களில் இன்கம்டாக்ஸ் ரெய்டு

Added : அக் 08, 2021
Share
Advertisement
பெங்களூர-வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலை அடுத்து, கர்நாடகாவின் பிரபல தொழிலதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், பட்டய கணக்காளர்கள், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா உதவியாளர் வீடு, அலுவலகம் உட்பட 50க்கும் அதிகமான இடங்களில், 250க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.கர்நாடகாவில் பல தொழிலதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள்

பெங்களூர-வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலை அடுத்து, கர்நாடகாவின் பிரபல தொழிலதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், பட்டய கணக்காளர்கள், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா உதவியாளர் வீடு, அலுவலகம் உட்பட 50க்கும் அதிகமான இடங்களில், 250க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் பல தொழிலதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் கணக்கில் காட்டப்படாமல் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரி துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வரி ஏய்ப்புக்கு சில பட்டய கணக்காளர்களும் உடந்தையாக இருந்ததாகவும் தகவல் வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக அந்த தகவலை வருமான வரித்துறையினர் பரிசீலித்து வந்தனர்.அதிகாலை முதல்இந்நிலையில், 25-0க்கும் அதிகமான அதிகாரிகள் நேற்று அதிகாலை 5:00 மணி முதலே, தங்கள் அதிரடி சோதனையை ஆரம்பித்தனர்.பெங்களூரு நகரின் நீர்ப்பாசன துறை ஒப்பந்ததாரரும், பட்டய கணக்காளருமான அமலாவின் ராமகிருஷ்ணா ஹெக்டே நகர் வீடு; ஒப்பந்ததாரர் லட்சுமிகாந்தின் வித்யாரண்யபுராவின் வீடு.சிமென்ட் விற்பனை செய்யும் ராகுல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சஹகார் நகர் அலுவலகம்; அரசு ஒப்பந்ததாரர்கள் உப்பார், கட்டிமனி, பீதரின் சுரேஷ் கணஜி உட்பட நீர்ப்பாசன துறையில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்களை குறி வைத்து சோதனை நடத்தப்பட்டது.இதற்கிடையில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் அந்தரங்க உதவியாளராக இருந்த உமேஷ் என்பவரின் ராஜாஜி நகர் பாஷ்யம் சதுக்கத்தில் உள்ள வீடு, நாகசந்திராவில் உள்ள வீடு, மான்யதா டெக் பூங்காவில் உள்ள பட்டய கணக்காளர் வீடு, அலுவலகம், அவரது சகோதரர் மால்தேஷ், உறவினர்கள் வீடுகள் என ஒன்பது இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.தீவிர விசாரணை அவரது உதவியாளர் அரவிந்த், மற்றொரு உதவியாளர் பிரசன்னா ஆகியோருக்கு சொந்தமான உத்தரஹள்ளி, ஆர்.டி.நகரில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இருவரையும் அதிகாரிகள் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கம், தங்க நகைகள் உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எடியூரப்பாவின் அந்தரங்க உதவியாளராக நியமிப்பதற்கு முன், எலஹங்கா பணிமனையில் பி.எம்.டி.சி., பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுனராக உமேஷ் பணியாற்றியது தெரிய வந்துள்ளது.அவர் மற்றும் அவரின் இரு உதவியாளர்களை, நகரின் குயின்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.பா.ஜ.,வில் பரபரப்புபறிமுதல் செய்த பொருட்கள், ரொக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வருமான வரித்துறை சோதனை, கர்நாடக பா.ஜ., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவாளர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை, ம.ஜ.த.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.120 கார்கள் சோதனை நடத்த மூன்று நாட்களுக்கு முன்னதாகவே, 120 'இன்னோவா கிரிஸ்டா' கார்களை வருமான வரித்துறை முன்பதிவு செய்திருந்தது. நேற்று காலை சோதனை நடத்த வேண்டிய ஆவணங்கள் கிடைத்தவுடன், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

யார் தவறு செய்தாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விட மாட்டார்கள். சோதனை விஷயத்தில் எந்த விதமான அரசியல் உள்நோக்கமும் இல்லை. அதிகாரிகள் அவர்கள் கடமையை செய்துள்ளனர். இடைத்தேர்தலில் பிரதிபலிக்காது.எடியூரப்பா, முன்னாள் முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X