பொது செய்தி

இந்தியா

பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் திருடர்களை கண்காணிக்க ரகசிய கேமிராக்கள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
பெங்களூரு-மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில், பிக்பாக்கெட், மொபைல் போன் திருட்டு, செயின் பறிப்பாளர்களை எண்ணி பயணியர் பயப்பட தேவையில்லை. திருடர்களை கண்காணிக்க ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் ரயில்வே போலீசாரை எச்சரித்து, திருடர்களை அடையாளம் காண்பிக்கும்.ரயில் நிலையங்களில், பிக்பாக்கெட், செயின் பறிப்பு, லக்கேஜ், பர்ஸ் திருட்டு போன்ற குற்றங்கள்

பெங்களூரு-மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில், பிக்பாக்கெட், மொபைல் போன் திருட்டு, செயின் பறிப்பாளர்களை எண்ணி பயணியர் பயப்பட தேவையில்லை. திருடர்களை கண்காணிக்க ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் ரயில்வே போலீசாரை எச்சரித்து, திருடர்களை அடையாளம் காண்பிக்கும்.ரயில் நிலையங்களில், பிக்பாக்கெட், செயின் பறிப்பு, லக்கேஜ், பர்ஸ் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரிக்கிறது. இதற்கு கடிவாளம் போட, ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.ரயில் நிலையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.ரூ.2.4 கோடியில்முதன் முறையாக பெங்களூரின் கிராந்தி வீரா சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில், 2.4 கோடி ரூபாய் செலவில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இக்கேமராவில் ரயில் நிலையத்தின் திருடர்களை பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ரயில் நிலையத்தில் நுழைந்தவுடன், கேமராக்கள் விழிப்படையும்.அவர்கள் முக கவசம் அணிந்திருந்தாலும் கூட கேமரா கண்களிலிருந்து தப்பிக்க முடியாது. இது போன்ற அதிநவீன தொழில்நுட்பம் உட்கொண்டதாகும்.இது தொடர்பாக, ரயில்வே உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சோதனை முறையில் கிராந்திவீரா சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் முகங்களை அடையாளம் காண்பிக்கும் கேமராக்கள் பொருத்தியுள்ளோம்.கேமராவில் பதிவு மெஜஸ்டிக் உட்பட பெங்களூரின் பல்வேறு ரயில் நிலையங்களில், மொபைல் திருட்டில் சிக்கிய நுாற்றுக்கும் மேற்பட்டோர் பெயர், போட்டோ, கை விரல் ரேகை உட்பட அனைத்து விபரங்களும், கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் ரயில் நிலையத்தில், நுழைந்தவுடனேயே, கமாண்ட் சென்டருக்கு எச்சரிக்கை வரும். இதையடுத்து ஆர்.பி.எப்., ரயில்வே பாதுகாப்பு படையினர், 'மப்டி'யில் திருடர்களை பின் தொடர்வர். இவர்கள் கை வரிசையை காண்பித்தால், கைது செய்து சிறையில் அடைப்பர். ரயில் நிலையத்துக்குள் மட்டுமின்றி, சுற்றுப்பகுதிகளில் நடமாடினாலும் கூட, கேமராக்கள் கண்டுபிடிக்கும்; அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும். இவ்வாறு, 157 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை பல திருடர்கள் சிக்கியுள்ளனர். முதற்கட்டமாக, பெங்களூரின் ரயில் நிலையத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில், நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களிலும் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X