பொது செய்தி

இந்தியா

பிரதமர், முதல்வர் நிவாரணம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
பெலகாவி: பெலகாவியில் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தின் ஏழு பேர் உயிரிழந்தனர். இவர்கள் பிரதமர் நரேந்திர மோடி 2 லட்சம் ரூபாய்; முதல்வர் பசவராஜ் பொம்மை 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளனர்.6 பைக்குகள் பறிமுதல் ஞானபாரதி நகர்: பெங்களூரு ஞானபாரதி நகர் பகுதியில் வாகன திருட்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்த வந்த புகாரை அடுத்து ஞானபாரதி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்

பெலகாவி: பெலகாவியில் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தின் ஏழு பேர் உயிரிழந்தனர். இவர்கள் பிரதமர் நரேந்திர மோடி 2 லட்சம் ரூபாய்; முதல்வர் பசவராஜ் பொம்மை 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளனர்.6 பைக்குகள் பறிமுதல் ஞானபாரதி நகர்: பெங்களூரு ஞானபாரதி நகர் பகுதியில் வாகன திருட்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்த வந்த புகாரை அடுத்து ஞானபாரதி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுண் நாயக் தலைமையில், வாகன திருடனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆறு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தங்கையை மிரட்டி அண்ணன் பலாத்காரம்யாத்கிர்: யாத்கிர் சஹபுரா அருகே உள்ள கோகி கிராமத்தை சேர்ந்த 20 வயது வாலிபர், அக்டோபர் 4ல் தன் சித்தப்பா மகளிடம், சீதாப்பழம் பறித்து தருகிறேன் என ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட இளம் பெண், கோகி போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததால் வாலிபர் கைது செய்யப்பட்டார்.நேர்த்திகடன் செலுத்திய நட்சத்திர தம்பதிதட்சிண கன்னடா: தட்சிண கன்னடா அருகே உள்ள குத்தார் கொரகஜ்ஜா கோவிலுக்கு இயக்குனர் பிரேம், நடிகை ரக் ஷிதா தம்பதி நேற்று சென்று சாமி தரிசனம் செய்தனர். தங்களது வேண்டுதலை நிறைவேற்றியதால் கொரகஜ்ஜா சுவாமிக்கு வெள்ளி விளக்கு, மணியை காணிக்கையாக வழங்கினர்.எம்.எல்.ஏ.,விடம் மாணவர்கள் மனுநெலமங்களா: பெங்களூரு ஊரகம் நெலமங்களா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சீனிவாச மூர்த்தியை நேற்று பவாட தேவரு கல்லுாரி மாணவ, மாணவிகள் சந்தித்து மனு அளித்தனர். அதில், 'கல்லுாரிக்கு செல்லும் சொன்டி கொப்பா சாலையின் இருபுறமும் சட்ட விரோதமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்தி சிலர் மாணவிகளுக்கு தொந்தரவு தருகின்றனர். இதை தடுக்க வேண்டும்' என, கூறி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X