பொது செய்தி

இந்தியா

'கர்நாடகாவுக்கு வருவதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும், ஜனாதிபதி

Added : அக் 08, 2021
Share
Advertisement
சாம்ராஜ்நகர்-''கர்நாடகாவுக்கு வருவதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்,'' என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மூன்று நாள் பயணமாக கர்நாடகாவுக்கு நேற்று முன் தினம் வந்தார். நேற்று காலையில், பிலிகிரி ரங்கனபெட்டா மலைக்கு சென்ற அவர், சாமி தரிசனம் செய்து விட்டு சாம்ராஜ்நகர் சென்றார்.சாம்ராஜ்நகர் அருகே உள்ள எடபெட்டாதல்லி என்ற இடத்தில்

சாம்ராஜ்நகர்-''கர்நாடகாவுக்கு வருவதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்,'' என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மூன்று நாள் பயணமாக கர்நாடகாவுக்கு நேற்று முன் தினம் வந்தார். நேற்று காலையில், பிலிகிரி ரங்கனபெட்டா மலைக்கு சென்ற அவர், சாமி தரிசனம் செய்து விட்டு சாம்ராஜ்நகர் சென்றார்.சாம்ராஜ்நகர் அருகே உள்ள எடபெட்டாதல்லி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள 450 படுக்கை கொண்ட மருத்துவமனையை நேற்று அவர் துவக்கி வைத்தார்.கவர்னர் தாவர் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.டி சோமசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். ஜனாதிபதி பேசுகையில், 'கர்நாடகாவுக்கு வருவதென்றால் எனக்கு மிகவும் விருப்பம். உங்களுடன் இருப்பது என்றால் மேலும் சந்தோஷம்' என, கன்னடத்திலேயே பேசினார். இதை கேட்டு அங்கிருந்தோர் கரகோஷம் எழுப்பினர்.தொடர்ந்து அவர் பேசுகையில், ''தசரா துவக்க நாளில் மருத்துவமனையை திறந்து வைப்பது மகிழ்ச்சி; ஆயுஷ்மான் ஆரோக்கியாவில் சிம்ஸ் மருத்துவமனை 3வது இடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சி. நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சுகாதார சேவையை விரிவுபடுத்துவது அவசியமாகும்.கொரோனா காலத்தில் டாக்டர்கள், சுகாதார துறை ஊழியர்கள் சிறந்த சேவையாற்றி உள்ளனர். நமது நாட்டின் பெருமையை அதிகப்படுத்தி உள்ளனர். நாட்டின் வளர்ச்சியில் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டும் முன்னிலை வகிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சாம்ராஜ்நகர் மருத்துவ கல்லுாரி மற்றும் பிலிகிரி ரங்கனபெட்டாவில் ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்தது. ஹெலிபேட் அமைந்துள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகரின் 15 கி.மீ., சுற்றளவுக்கு ஆளில்லா விமானம், ஏர் பலுான் பறக்க விடுவது, பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டிருந்து. முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில் ''ஜனாதிபதி வருகை தந்திருப்பது நமது அதிர்ஷ்டம். நமது அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, மருத்துவத்தில் முக்கியத்துவம் அளிக்கிறது. சாம்ராஜ்நகர் பின்தங்கிய மாவட்டம் இல்லை.முன்னேறிய மாவட்டம். மாநிலத்தில் இன்னும் எட்டு மாவட்டங்களில் மருத்துவ கல்லுாரி ஆரம்பிக்கப்பட உள்ளது. படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லுாரி ஆரம்பிக்கப்படும். இந்த ஆண்டு ஹாவேரி, யாத்கிர், சிக்கமகளூரு மாவட்டத்தில் மருத்துவ கல்லுாரி ஆரம்பிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X