ஐ.சி.எப்., மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.சி.எப்., மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி துவக்கம்

Added : அக் 08, 2021
Share
சென்னை-ஐ.சி.எப்., மருத்துவமனையில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறக்கப்பட்டது.ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு, தடையின்றி ஆக்சிஜன் வழங்க ஏதுவாக, ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்.,பில் உள்ள மருத்துவமனை வளாகத்தில், காற்றில் இருந்து ஒரு

சென்னை-ஐ.சி.எப்., மருத்துவமனையில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறக்கப்பட்டது.ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு, தடையின்றி ஆக்சிஜன் வழங்க ஏதுவாக, ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்.,பில் உள்ள மருத்துவமனை வளாகத்தில், காற்றில் இருந்து ஒரு நிமிடத்திற்கு, 250 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் மையம் நிறுவப்பட்டுஉள்ளது.ஐ.சி.எப்.,பில் நேற்று நடந்த விழாவில், இம்மையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதமர் நிவாரண நிதி வாயிலாக, ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, பிரதமர் மோடி, இத்திட்டங்களை துவக்கி வைத்தார். அதனுடன் சேர்த்து, ஐ.சி.எப்., மருத்துவமனை ஆக்சிஜன் மையமும் துவக்கி வைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X