குண்டர் சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: அழகிரி கோரிக்கை

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (39) | |
Advertisement
சென்னை : சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சீமானை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில், தேர்தல் பிரசார கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ், சோனியா ஆகியோரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, சீமான் பேசினார். தொடர்ந்து, வன்முறையை துாண்டும்
குண்டர் சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: அழகிரி கோரிக்கை

சென்னை : சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சீமானை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில், தேர்தல் பிரசார கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ், சோனியா ஆகியோரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, சீமான் பேசினார். தொடர்ந்து, வன்முறையை துாண்டும் வகையில் பேசி வருகிறார்.தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாக, நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து, போலீஸ் துறையினரிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


latest tamil news


'துணிவிருந்தால் என் மீது வழக்கு தொடுக்கட்டும்; கைது செய்யட்டும். சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன்' என்று சவால் விட்டு வருகிறார். விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன், தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சற்குணனுக்கும், சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்படும் சீமானை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (39)

Bhaskaran - Chennai,இந்தியா
09-அக்-202112:34:37 IST Report Abuse
Bhaskaran மாதாஜி கட்சியும் ...யும் தனியாக நின்னாள் Ella இடங்களிலும் தோற்று சாதனை புரிவார்கள் கட்டுத்தொகை பறி கொடுப்பார்கள்
Rate this:
Cancel
Dominic - mumbai,இந்தியா
08-அக்-202119:49:14 IST Report Abuse
Dominic Arasiyalil nagareegam theriyathaverkku court sariyanaya thandanai vazhainga vum.jana Nayagam yena sollikkkondu Semana, annamalai, pondaver alapparaoi thanga mudyavillai,
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-அக்-202117:31:17 IST Report Abuse
Bhaskaran Thimuka seemaan mel nadavadikai edukaathu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X