சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் ஓட்டுனரை தாக்கி பள்ளி மாணவர்கள் ரகளை

Added : அக் 08, 2021
Share
Advertisement
கிண்டி--பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை கண்டித்த ஓட்டுனரை கீழே தள்ளியதால், கிண்டியில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தி.நகரில் இருந்து நேற்று மாலை, வேளச்சேரி வழியாக திருவான்மியூர் நோக்கி செல்லும் மாநகர பஸ் புறப்பட்டது. சைதாப்பேட்டை நீதிமன்ற நிறுத்தத்தில், சின்னமலை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பஸ்சில் ஏறினர்.பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தி, படியில்

கிண்டி--பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை கண்டித்த ஓட்டுனரை கீழே தள்ளியதால், கிண்டியில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தி.நகரில் இருந்து நேற்று மாலை, வேளச்சேரி வழியாக திருவான்மியூர் நோக்கி செல்லும் மாநகர பஸ் புறப்பட்டது. சைதாப்பேட்டை நீதிமன்ற நிறுத்தத்தில், சின்னமலை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பஸ்சில் ஏறினர்.பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தி, படியில் தொங்கியவாறு பயணித்தனர். ஓட்டுனர் பேருந்துக்குள் ஏறி வருமாறு கூறியும், அவர்கள் கேட்கவில்லை.கிண்டி ரேஸ் கோர்ஸ் நிறுத்தத்தில், ஓட்டுனர் ஏழுமலை பஸ்சை நிறுத்தி, மாணவர்களை உள்ளே வருமாறு கூறினார். அப்போது தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த மாணவர்கள், ஏழுமலையை கீழே தள்ளி அடிக்க பாய்ந்துள்ளனர்.பயணியர் கூடியதால், மாணவர்கள் தப்பி ஓடினர். இதை கண்டித்து, பின்னால் வந்த பஸ்களை நிறுத்தி, ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிண்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சு நடத்திய பின், பஸ்களை இயக்க துவங்கினர். இந்த சம்பவத்தால், கிண்டியில் அரை மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X