சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்றத்துாரில் 2 டன் செம்மர கட்டை பறிமுதல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
குன்றத்துார்--குன்றத்துார் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 டன் செம்மர கட்டைகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.குன்றத்துாரை அடுத்த நந்தம்பாக்கம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவில், பழைய மெத்தை குடோனில் செம்மர கட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.சென்னை நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு உதவி

குன்றத்துார்--குன்றத்துார் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 டன் செம்மர கட்டைகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.குன்றத்துாரை அடுத்த நந்தம்பாக்கம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவில், பழைய மெத்தை குடோனில் செம்மர கட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.சென்னை நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு உதவி வன பாதுகாவலர் மகேந்திரன், சென்னை வனக்காவல் நிலைய வனச்சரக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர், நேற்று காலை சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.பூட்டியிருந்த குடோனை உடைத்து பார்த்த போது, ஏற்றுமதி செய்வதற்காக, 60 மூட்டைகளில் செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.செம்மர கட்டைகள் மற்றும் எடை இயந்திரம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், தனக்கு சொந்தமான குடோனை, 10 மாதங்களுக்கு முன், மதுரவாயலைச் சேர்ந்த அமீர் என்பவருக்கு, மெத்தை தயாரிக்க வாடகைக்கு விட்டது தெரிந்தது. தலைமறைவாக உள்ள அமீரை, வனத்துறையினர் தேடி வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம், செம்மர கட்டை கடத்தி வந்த கும்பல் குறித்தும் விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் செம்மர கட்டைகள், ஸ்ரீபெரும்புதுார் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அவற்றின் மதிப்பு 2 கோடி ரூபாய் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X