மயிலாப்பூரில் அடாவடி போலீசாருக்கு கண்டனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மயிலாப்பூரில் அடாவடி போலீசாருக்கு கண்டனம்

Added : அக் 08, 2021
Share
சென்னை-மகாளய அமாவாசையை முன்னிட்டு, மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் வைத்திருந்த பூஜை பொருட்களை மயிலாப்பூர் போலீசார் தட்டிவிட்டு, விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மகாளய அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம், தர்ப்பணம் கொடுக்க பலரும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளக்கரைக்கு வந்தனர். கொரோனா பரவலை முன்னிட்டு, குளம் மூடப்பட்டிருந்தது.

சென்னை-மகாளய அமாவாசையை முன்னிட்டு, மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் வைத்திருந்த பூஜை பொருட்களை மயிலாப்பூர் போலீசார் தட்டிவிட்டு, விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மகாளய அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம், தர்ப்பணம் கொடுக்க பலரும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளக்கரைக்கு வந்தனர். கொரோனா பரவலை முன்னிட்டு, குளம் மூடப்பட்டிருந்தது. இருந்தாலும், குளக்கரைக்கு அருகே தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் காத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பூஜை பொருட்களை தட்டிவிட்டு, போலீசார் விரட்டினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை:மயிலாப்பூரில் கபாலி கோவில் குளத்திற்கு மக்கள் வழிபாடு நடத்த வந்தபோது, போலீசார் அவர்களை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை.மக்கள் கோவிலை ஒட்டிய பல்வேறு தெருக்களில், பல இடங்களில் தங்களது கடமையை நிறைவேற்ற வரிசையில் பரிதவித்து நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மயிலாப்பூர் போலீசார், முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், மக்கள் கைகளில் இருந்த பழம், தேங்காய் உள்ளிட்டவைகளை தட்டி பறித்து கீழே தள்ளியதாகவும் சொல்லப்படுகிறது.இந்த அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதை, பல முறை வெளிப்படுத்துகிறது. இதை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மயிலாப்பூர் உதவி கமிஷனரிடம் கேட்டபோது, 'தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் யாரையும் போலீசார் விரட்டவில்லை. யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X