பொது செய்தி

தமிழ்நாடு

வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி விழா துவக்கம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருவொற்றியூர்-வடிவுடையம்மன் கோவில், நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது.சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு, ஆண்டுதோறும் புரட்டாசியில், நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.இவ்வாண்டு, நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றத்துடன் நவராத்திரி விழா துவங்கியது. முன்னதாக,

திருவொற்றியூர்-வடிவுடையம்மன் கோவில், நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது.சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு, ஆண்டுதோறும் புரட்டாசியில், நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.இவ்வாண்டு, நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றத்துடன் நவராத்திரி விழா துவங்கியது. முன்னதாக, அம்மன் சன்னிதி முன் உள்ள கொடிமரம், பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களால் சுத்தம் செய்யப்பட்டது.பின், வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'ஓம் சக்தி... பராசக்தி!' என முழங்கினர். நிகழ்வில், கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதல் நாளில் உற்சவ தாயார், தபசு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் உள் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார். நவராத்திரி நாட்களில், உற்சவ தாயார், பராசக்தி, நந்தினி, கவுரி, பத்மாவதி, உமாமகேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி, மீனாட்சி உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தை வலம் வருவார்.வரும் 15ம் தேதி இரவு, கொடியிறக்கத்துடன், நவராத்திரி விழா நிறைவுறும். இதே போல், அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி மற்றும் பொன்னியம்மன் கோவில்களிலும், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X