சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
தொழிலாளியை வெட்டிய திருடர்கள்செங்குன்றம்: கிராண்ட்லைன் ஊராட்சியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் அங்கு வந்த இருவர், தொழிலாளர்கள் தங்கியிருந்த நான்கு அறைகளின் கதவை வெளிப்பக்கம் தாழிட்டனர். பின், தீபக், 24, மற்றும் நாயக், 26, துாங்கிய அறைக்குள் நுழைந்து, மொபைல் போன்களை

தொழிலாளியை வெட்டிய திருடர்கள்செங்குன்றம்: கிராண்ட்லைன் ஊராட்சியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் அங்கு வந்த இருவர், தொழிலாளர்கள் தங்கியிருந்த நான்கு அறைகளின் கதவை வெளிப்பக்கம் தாழிட்டனர். பின், தீபக், 24, மற்றும் நாயக், 26, துாங்கிய அறைக்குள் நுழைந்து, மொபைல் போன்களை திருடினர்.தீபக், அவர்களை பிடிக்க முயன்றபோது, மர்ம நபர்கள் கத்தியால் அவரை தலையில் வெட்டி தப்பினர். படுகாயமடைந்த தீபக் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலிதாம்பரம்: மேற்கு வங்கம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ஷாருக்கான், 23; கட்டட தொழிலாளி. இவர், முடிச்சூர், மேற்கு லட்சுமி நகர், நேரு காலனியில் தங்கி, அடுக்குமாடி வீடு கட்டும் பணியில் ஈடுபட்டார். நேற்று மதியம் வீட்டின் முதல் தளத்தில் நின்று, சக ஊழியரிடம் இருந்து கட்டட பணிக்கு தேவையான கம்பியை வாங்க முயன்றார். அப்போது, மின் கம்பியின் மீது கட்டுமான கம்பி எதிர்பாராதவிதமாக உரசியதில், சம்பவ இடத்திலேயே ஷாருக்கான் மின்சாரம் பாய்ந்து பலியானார். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.மோசடியில் ஈடுபட்டவரிடம் விசாரணைஐஸ்ஹவுஸ்: திருவல்லிக்கேணி, வி.ஆர்., பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கிரிஜா, 36. இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இளநிலை உதவியாளர் மோகன் ராஜ், 25, என்பவர், 2018ல், 14 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதில், 2.70 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில், செப்., 2ல் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், நேற்று முன்தினம் மோகன்ராஜை கைது செய்தனர். மாமூல் கேட்டு மிரட்டியோருக்கு 'கம்பி'திருவொற்றியூர்: தாங்கல், டி.எச். சாலையைச் சேர்ந்தவர் இதயதுல்லா, 28; பிரியாணி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, இவரது கடைக்கு வந்த இருவர், பிரியாணி சாப்பிட்டு பணம் தராததுடன், மாமூல் கேட்டு வெட்ட முயற்சித்தனர். பொதுமக்கள் கூடவே, அங்கிருந்து தப்பினர். திருவொற்றியூர் போலீசார் விசாரித்து, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த டேனியல், 28, என்பவரை, நேற்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சாகுல் ஹமீது என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.போன் திருடர்களுக்கு அடி, உதைசிந்தாதிரிப்பேட்டை: அண்ணா சாலை, சிம்சன் பேருந்து நிறுத்தத்தில், நேற்று முன்தினம் இரவு 'தடம் எண்: 51பி' பேருந்து நின்றது. அப்போது: இருவர், பயணி ஒருவரின் மொபைல் போனை திருட முயன்றனர். இதைப்பார்த்த சக பயணியர், இருவரையும் நையப்புடைத்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அமீனுல்லா, 41, மணிகண்டன், 21, என தெரிந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர்: எண்ணுார், ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் ஆனந்த், 25. கடந்த 3ம் தேதி, எண்ணுார் விரைவு சாலை, எல்லையம்மன் கோவில் சந்திப்பு அருகே நின்றபோது, மர்ம நபர்கள் இருவர், ஆனந்தின் மொபைல் போனை பறித்து தப்பினர். விசாரித்த திருவொற்றியூர் போலீசார், சண்முகபுரத்தைச் சேர்ந்த நவீன், 26, சுபாஷ், 20, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.வாலிபருக்கு 'போக்சோ'திருமங்கலம்: நொளம்பூரைச் சேர்ந்த, 47 வயதுடைய பெண் ஒருவர், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில், 'என் 17 வயது மகளிடம், நெற்குன்றம், சக்தி நகரைச் சேர்ந்த பாண்டியராஜன், 24, சமூக வலைதளம் வாயிலாக பழகி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். விசாரித்த போலீசார், பெங்களூரில் பணிபுரிந்து வரும் பாண்டியராஜனிடம் லாவகமாக பேசி சென்னை வரவழைத்து, 'போக்சோ' சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.செயின் பறிப்பு திருடன் சிக்கினான்ஆவடி: ஆவடி கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் பிரியங்கா, 33. இவரிடம், 29ம் தேதி, மர்ம நபர் நகையை பறித்து தப்பினார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்தனர். இதில், திருவேற்காடு, அன்பு நகரைச் சேர்ந்த கார்த்திக், 24, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். கார்த்திக் மீது ஆவடி, திருமங்கலம் காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளன.'வார்னிஷ்' தொழிற்சாலையில் தீதண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த ஆனந்த், 45, என்பவருக்கு, ஐ.ஓ.சி., பரமேஸ்வரர் நகரில் குடோன் உள்ளது. இங்கு டர்பைன், தின்னர் மற்றும் வார்னிஷ் தயாரிக்கிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவில், குடோனில் தீப்பற்றியது. தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை அணைக்க முயற்சித்தனர். அருகே இருந்த பர்னிச்சர் குடோனிற்கும் தீ பரவியது. அதிகாலை வரை போராடி, தீயை அணைத்தனர். குடோனில் இருப்பு வைத்திருந்த, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள டர்பைன் தயாரிக்கும் மூலப்பொருள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. ஆர்.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணிடம் செயின் பறிப்புமாதவரம்: பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகர், 4வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சுகுணா, 59; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, குமரன் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது, டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள், அவரது 3 சவரன் செயினை பறித்து சென்றனர். மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X