பொது செய்தி

தமிழ்நாடு

பணியாளர் நியமனத்தில் ஏக குளறுபடி நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை-சி.எம்.டி.ஏ.,வில், கடந்த ஆட்சியில் நடந்த பணியாளர் நியமன குளறுபடியில், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், கடந்த ஆட்சியில், 131 பணியாளர்கள் நேரடி தேர்வு வாயிலாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பணி

சென்னை-சி.எம்.டி.ஏ.,வில், கடந்த ஆட்சியில் நடந்த பணியாளர் நியமன குளறுபடியில், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், கடந்த ஆட்சியில், 131 பணியாளர்கள் நேரடி தேர்வு வாயிலாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன நடைமுறையில், பல்வேறு விதிகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது.இதில், தவறுதலாக நியமிக்கப்பட்டதாக ஏற்கனவே, ஐந்து பணியாளர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. எஞ்சிய பணியாளர்களில், தவறான கல்வித்தகுதி, வயது குறிப்பிட்டது தொடர்பாக, 18 பேரை நீக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கான, 'நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்ட நிலையில், சில பணியாளர்கள் நீதிமன்றம் வாயிலாக தடை பெற்றுஉள்ளனர். இருப்பினும், இந்த வழக்கை சட்டப்பூர்வமாக அணுக, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பணியாளர் குளறுபடிக்கு காரணமான, ஒரு 'சீப் பிளானர்' உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் மீது, நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் துக்கப்பட்டுள்ளன.இந்த நியமனங்களின் போது, உறுப்பினர் செயலராக இருந்தவர், துணை தலைவர் பொறுப்பை கவனித்தவர் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குறித்த விபரங்களை, சி.எம்.டி.ஏ., தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளது. இதன் அடிப்படையில், தலைமை செயலர் அனுமதியுடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.இது குறித்து வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X