சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.45 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை--இருவேறு விமான பயணியரிடம் இருந்து, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.துபாயிலிருந்து நேற்று சென்னை வந்த 'எமிரேட்ஸ்' விமானத்தில், தங்கம் கடத்தி வருவதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, 21 வயதுள்ள பயணி ஒருவரை சோதனை செய்த போது, ஆசனவாயில் தங்க பசைகள் அடங்கிய மூன்று பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது

சென்னை--இருவேறு விமான பயணியரிடம் இருந்து, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.துபாயிலிருந்து நேற்று சென்னை வந்த 'எமிரேட்ஸ்' விமானத்தில், தங்கம் கடத்தி வருவதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, 21 வயதுள்ள பயணி ஒருவரை சோதனை செய்த போது, ஆசனவாயில் தங்க பசைகள் அடங்கிய மூன்று பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.இந்த வகையில், 32.77 லட்சம் ரூபாய் மதிப்பிலான 774 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது உடைமைகளை சோதனை செய்ததில், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. அவற்றையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து விசாரிக்கின்றனர். துபாயிலிருந்து சென்னை வந்த 'பிளை துபாய்' விமானத்தில், பயணி ஒருவர், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காணப்பட்டார். அவரை மறித்து சுங்கத்துறை அதிகாரிகள், உடைமைகளை ஆய்வு செய்தனர்.அவரது சூட்கேசில் வைத்திருந்த லேப்டாப் சார்ஜரை சோதனை செய்த போது, 285 கிராம் எடை உடைய, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சிக்கியது. மேலும், இரண்டு ஐபோன் உட்பட, பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X