அனல் மின் நிலையங்கள் வேண்டாம்: அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனல் மின் நிலையங்கள் வேண்டாம்: அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

Added : அக் 08, 2021
Share
சென்னை--வடசென்னையில், 'அனல் மின் நிலையங்களால், அதிகரிக்கும் இளவயது மரணங்களை தடுக்க வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் சார்பில்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அக்கட்சியின் அறிக்கை:வடசென்னையில் வல்லுார் மற்றும் எண்ணுார் அனல் மின் நிலையங்களால், அந்த பகுதிகளின் சூழலியல் சீரழிந்து வருவதாக, 'சி 40' என்ற அமைப்பின் அறிக்கை எச்சரிக்கிறது.உலக அளவில்,

சென்னை--வடசென்னையில், 'அனல் மின் நிலையங்களால், அதிகரிக்கும் இளவயது மரணங்களை தடுக்க வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் சார்பில்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அக்கட்சியின் அறிக்கை:வடசென்னையில் வல்லுார் மற்றும் எண்ணுார் அனல் மின் நிலையங்களால், அந்த பகுதிகளின் சூழலியல் சீரழிந்து வருவதாக, 'சி 40' என்ற அமைப்பின் அறிக்கை எச்சரிக்கிறது.உலக அளவில், பெருநகரங்களில் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்து வரும் அந்த அமைப்பு, வடசென்னை பகுதியில் இதே நிலை தொடர்ந்தால், காற்று மாசுபாட்டால் இளவயது மரணங்கள் அதிகரிக்கும். இளவயதினர் அதிகம் பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது'என, அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், கடலில் சாம்பல் புகை படிவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எண்ணுார் பகுதி மீனவர்களும் குமுறுகின்றனர்.அனல் மின் நிலையங்கள் அதிகமான நச்சுக்காற்று மற்றும் சாம்பல் புகையை வெளியேற்றுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் கெடுவதோடு, மனித உயிர்களுக்கு ஆபத்தும் ஏற்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். வளர்ச்சி என்பது இயற்கையை சீரழிக்கக்கூடாது. எதிர்கால தலைமுறையின் நலனை கருதி, அனல் மின் நிலையங்களை படிப்படியாக கைவிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து; சூரிய ஆற்றல், காற்றாலை போன்ற மாசற்ற மின் உற்பத்தி முறைகளை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X