பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூரில் பதற்றமான 40 இடத்தில் வீடியோ பதிவு

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை நடைபெற உள்ளாட்சி இடைத்தேர்தலில், பதற்றமான 40 ஓட்டுச்சாவடிகளில், வீடியோ பதிவு செய்து, கண்காணிக்கப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் - 4; ஊராட்சி தலைவர் - 4 மற்றும், ஊராட்சி வார்டு உறுப்பினர் - 30 பதவி காலியாக அறிவிக்கப்பட்டது. இதற்கான, வேட்பு மனு தாக்கல் முடிந்து, ஒரு வாரமாக, பிரசாரம் நடைபெற்றது.நாளை

திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை நடைபெற உள்ளாட்சி இடைத்தேர்தலில், பதற்றமான 40 ஓட்டுச்சாவடிகளில், வீடியோ பதிவு செய்து, கண்காணிக்கப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் - 4; ஊராட்சி தலைவர் - 4 மற்றும், ஊராட்சி வார்டு உறுப்பினர் - 30 பதவி காலியாக அறிவிக்கப்பட்டது. இதற்கான, வேட்பு மனு தாக்கல் முடிந்து, ஒரு வாரமாக, பிரசாரம் நடைபெற்றது.நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள, 17 வார்டு உறுப்பினர் உள்ளிட்ட, 25 பதவிகளுக்கு, நாளை, தேர்தல் நடக்கிறது. இதற்காக, 81 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பதற்றமான, 40 மையங்களில், வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு தேவையான, பொருட்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவை கண்காணிக்க, மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, தலா, இரண்டு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பதிவான ஓட்டுச்சீட்டு பெட்டிகள் வைக்கப்படும். அங்கு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X