போலீஸ் டைரி 

Added : அக் 08, 2021
Share
Advertisement
சூடான பால் கொட்டி குழந்தை பலிஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், மஞ்சங்காரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 23. இவரது மனைவி சங்கீதா. வீட்டில் பாலை காய்ச்சி அதை தரையில் வைத்து விட்டுச் சென்றார். அப்போது அவர்களின் ஒரு வயது ஆண் குழந்தை காசியப்பன் பாலை உடலில் ஊற்றிக் கொண்டதில், பலத்த காயம் அடைந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு குழந்தையை

சூடான பால் கொட்டி குழந்தை பலிஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், மஞ்சங்காரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 23. இவரது மனைவி சங்கீதா. வீட்டில் பாலை காய்ச்சி அதை தரையில் வைத்து விட்டுச் சென்றார்.

அப்போது அவர்களின் ஒரு வயது ஆண் குழந்தை காசியப்பன் பாலை உடலில் ஊற்றிக் கொண்டதில், பலத்த காயம் அடைந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்தாக கூறினர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கார் மோதி முதியவர் பலிவெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, கீழ்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 61. இவர், நேற்று முன்தினம், திருமழிசை சென்று விட்டு, சைக்கிளில், கீழ்மணம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த, 'ஹோண்டா எலன்ட்ரா' கார், சைககிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த ஏழுமலை பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, அன்றிரவு அவர் இறந்தார். இதுகுறித்து, இவரது மனைவி வள்ளி அளித்த புகாரையடுத்து, வழக்கு பதிந்த வெள்ளவேடு போலீசார், காரை பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம், பதிபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனரான நவீன், 29, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.பணம், நகை திருட்டுகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ், 58. தனியார் தொழிற்சாலையில், காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம், கீழ் வீட்டை பூட்டிக் கொண்டு, மேல் வீட்டில் குடும்பத்தினருடன் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில், மேல் வீட்டை வெளிப்புறமாக தாழிட்ட மர்ம நபர்கள், கீழ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.பீரோவில் வைத்திருந்த 3 சவரன்நகை, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார்விசாரிக்கின்றனர்.மனைவியை தாக்கிய கணவர்ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, கட்டாரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சாந்தி, 38. வார சந்தைகளில், ஆறுமுகம், கீரை வியாபாரம் செய்து வருகிறார்.

சாந்தி, தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு வந்துள்ளது.இந்நிலையில், கடந்த 5ம் தேதி, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சாந்தியை, ஆறுமுகம் தாக்க முயன்ற போது, சாந்தி பயந்து வீட்டிற்கு வெளியே ஓடினார்.அப்போது, கல்லால் ஆறுமுகம் தாக்கியதில் சாந்தி படுகாயம் அடைந்தார். சோளிங்கர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின், வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மருத்துவமனையில் அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.ரேஷன் அரிசி பறிமுதல்பொன்னேரி: பொன்னேரி அடுத்த, பாலாஜி நகர் பகுதியில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் இருந்து, சிறிய லாரிகளில், ரேஷன் மூட்டைகள் கடத்தப்படுவதாக மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து, நேற்று அதிகாலை, போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அதில், ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்த, இரண்டு சிறு லாரிகளை மடக்கி பிடித்தனர்.லாரியில் இருந்த, 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். கடத்தலில் ஈடுபட்ட, பொன்னேரி பகுதியை சேர்ந்த வேல்சுந்தரபாண்டி, 63, ஊத்துக்கோட்டை அடுத்த, ஆரணி கிராமத்தை சேர்ந்த முனுசாமி, 24, ஆகிய இருவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X