பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை பாதிப்பு புகார் கட்டுப்பாட்டு அறை திறப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுமக்கள், வடகிழக்கு பருவமழை தொடர்பான, புகார் தெரிவிக்க, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த, ஆலோசனை கூட்டம், கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன், காணொலி காட்சி மூலம் நடத்தினார்.கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், டி.ஆர்.ஓ., மீனா பிரியதர்ஷிணி மற்றும்

திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுமக்கள், வடகிழக்கு பருவமழை தொடர்பான, புகார் தெரிவிக்க, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த, ஆலோசனை கூட்டம், கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன், காணொலி காட்சி மூலம் நடத்தினார்.கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், டி.ஆர்.ஓ., மீனா பிரியதர்ஷிணி மற்றும் வருவாய், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின் கலெக்டர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக, பொதுமக்கள், ஏதேனும் உதவிக்காகவும், புகார் அளிக்கவும், கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.பொதுமக்கள், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 044- 27664177, 044 -27666746 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.மேலும், 'வாட்ஸ் ஆப்'பில், 94443 17862, 98403 27626 மற்றும் 1800 599 7626 என்ற மாவட்ட உதவி மையத்திலும், தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X