சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்,,,,

Added : அக் 08, 2021
Share
Advertisement
குடிநீர் கேட்டு சாலை மறியல்வாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டையில் படப்பம், செல்லியம்மன் நகர், வள்ளுவப்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு, பாலாறு குடிநீர் செல்கிறது. இரு தினங்களாக, படப்பம் கிராமத்திற்கு பாலாறு குடிநீர் வரவில்லை என, காலி குடங்களுடன் முத்தியால்பேட்டை ஊராட்சி அலுவலகம் அருகே, கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையறிந்த

குடிநீர் கேட்டு சாலை மறியல்வாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டையில் படப்பம், செல்லியம்மன் நகர், வள்ளுவப்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு, பாலாறு குடிநீர் செல்கிறது.

இரு தினங்களாக, படப்பம் கிராமத்திற்கு பாலாறு குடிநீர் வரவில்லை என, காலி குடங்களுடன் முத்தியால்பேட்டை ஊராட்சி அலுவலகம் அருகே, கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையறிந்த வாலாஜாபாத் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, பாலாறு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.தேசிய அஞ்சல் வாரம் துவக்கம்காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி கூறியதாவது:

இந்திய அஞ்சல் துறையால், அக்., -9ல் இருந்து, 16ம் தேதி வரை, தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்பட உள்ளது.நாளை, உலக தபால் தினம்; வரும் -10ல் சிறு சேமிப்பு தினம்; -12ல் அஞ்சல் ஆயுள் காப்பீடு தினம்; 13ல் அஞ்சல் தலை சேகரிப்பு தினம்; 14ல் வணிக வளர்ச்சி தினம்; 16ல் அஞ்சல் என, அழைக்கப்படும் கடிதம் தினம் என கொண்டாடப்பட உள்ளது. இதில் மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி நடைபெற உள்ளது. பல தரப்பினர் பங்கேற்று, பயன் பெறலாம். -13ம் தேதி தபால் கண்காட்சி நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.சாலை விதி விழிப்புணர்வுதிருத்தணி: திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு, 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள், ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்கு நேற்று வந்தனர்.

திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பொறுப்பு பன்னீர்செல்வம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள், அதை எவ்வாறு கடைப்பிடிப்பது, வளைவுகளில் திரும்பும் போது என்ன சிக்கல் கொடுக்க வேண்டும் என, செயல்முறையுடன் விழிப்புணர்வு அளித்தார்; தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X