சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி விவசாயி பலி

Added : அக் 08, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர், 50; விவசாயி. நேற்று காலை வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக, இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் சென்றார்.ஓரிக்கை பாலாறு அருகில், மாகரல் நோக்கி சென்ற எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி, அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், அதே இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த ஆற்பாக்கம்

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர், 50; விவசாயி. நேற்று காலை வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக, இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் சென்றார்.ஓரிக்கை பாலாறு அருகில், மாகரல் நோக்கி சென்ற எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி, அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், அதே இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த ஆற்பாக்கம் மக்கள், சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தாலுகா போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். 'தனசேகர் இறப்பு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X