அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கோயில் சொத்துக்கள் கொள்ளை: எச்.ராஜா காட்டம்

Added : அக் 08, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
பழநி: 'ரூபாய் 10 லட்சம் கோடிக்கு மேல் கோயில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன' என, பழநியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.வார இறுதி நாட்களில் கோயில்களை திறக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாத விநாயகர் கோயில் முன்பு பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் எச்.ராஜா பேசியது: ஹிந்து கோயில்களின் சாவி மட்டும் அரசிடம் உள்ளதால் வெள்ளி,
H Raja, BJP, Temple Reopen

பழநி: 'ரூபாய் 10 லட்சம் கோடிக்கு மேல் கோயில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன' என, பழநியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.

வார இறுதி நாட்களில் கோயில்களை திறக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாத விநாயகர் கோயில் முன்பு பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் எச்.ராஜா பேசியது: ஹிந்து கோயில்களின் சாவி மட்டும் அரசிடம் உள்ளதால் வெள்ளி, சனி, ஞாயிறு கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதில்லை. மற்ற மதத்தலங்களில் அவ்வாறு இல்லை. நேற்று (அக்.7) தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் தனுஷ்கோடியில் "அமாவாசைக்கு தடை; படப்பிடிப்புக்கு அனுமதி" என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு அரசு செயல்படுவது வெட்கக்கேடானது.

கோயில் நிலங்கள் அரசு நிலங்கள் அல்ல. கடந்த 55 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கோயில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. பெரியாரிஸ்ட்களின் குறிக்கோள் கோயிலை அழிப்பது. பா.ஜ., வினர் மாவட்டம் வாரியாக கோயில்களை காக்க குழு அமைக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



சிறுபான்மையின பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் பேசுகையில்,''வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசினால் அவருக்கு சேலை கட்டும் போராட்டத்தை நடத்துவேன்'', என்றார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் எச்.ராஜா தெரிவித்தது,''பழநி உட்பட பல கோயில்களில் பாலாலயம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ளது. காஸ், பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி., க்குள் கொண்டு வராமல் இருப்பதற்கு தமிழக அரசே காரணம்'', என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - chennai,இந்தியா
08-அக்-202115:11:36 IST Report Abuse
Bala திராவிட கட்சிகளையும் பெரியாரிஸ்ட்களின் பொய் பித்தலாட்டங்களையும் தலைவர் திரு எச் ராஜா மற்றும் திரு மாரிதாஸ் அவர்களைத்தவிர யாரால் கிழி கிழின்னு கிழித்து தொங்கவிடமுடியும்? தமிழகத்தின் பொற்காலம் மலர வேண்டும் என்றால் பல எச் ராஜாக்களும் மாரிதாஸ் அவர்களும் மற்றும் தேச பற்று மிக்க வேலூர் இப்ராஹிம் போன்றவர்களும் உருவாகவேண்டும். கூடிய சீக்கிரம் இது நடந்தே தீரும். பிரபஞ்ச சக்திக்கு எதிராக போர்தொடுக்கும் தீய சக்திகள் உருப்பட்டதாக வரலாறு இல்லை. வாழ்க பாரதம், வளர்க தமிழகம், வாழ்க எச் ராஜா அவர்கள், வளர்க அவர்களின் திருத்தொண்டு. வாழ்க ஆன்மீக பூமி, ஆழ்வார் பூமி தமிழகம்
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
08-அக்-202114:25:02 IST Report Abuse
PKN கடந்த 10 வருடங்களாக இவர்கள் நண்பர்கள் ஆட்சிதானே தமிழகத்தில் நடந்தது அதில் நடந்த கொள்ளையை பற்றி இவருக்கு தெரிந்ததால் தான் 10 லட்சம் கோடி என தெளிவாக சொல்கிறார். கவலைப்படாதீர்கள் தற்போதைய இந்து அறநிலையத்துறை அமைச்சர் நோன்டிநொங்கு எடுத்துவிடுவார் உங்காளுகளுக்கு கடந்த ஆட்சில் பங்கு கிடைத்திருந்தால் அவர்களை உடனே அப்ரூவராக மாறச்சொல்லுங்கள். அரசே கண்டுபிடித்தால் ஏடாகூடமாகிவிடும்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
08-அக்-202114:13:37 IST Report Abuse
Dhurvesh இவன் ஒரு வீணாப்போன வெது வெட்டு , 100 லஸ்கம் 1000 லட்சம் என்று உளறுவான் இந்த 10 வருடம் என்ன கிழிச்சான் இவன் இப்பவும் இவன் சொன்னதிற்கு எங்கே ஆதாரம் என்றால் ஓடிவிடுவான் அவ்வளவு வாய் சவடால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X