ராஜபாளையம் : ''வெளிப்படையாக கிறிஸ்துவ பரப்புரை செய்து கொண்டு, ஹிந்து என சான்றிதழ் வைத்து கிரிமினல் குற்றத்தில் ஈடுபடும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., போன்றவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது: மஹாளய அமாவாசை தினத்தில், முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்கு ராமேஸ்வரத்தில் தடை விதித்து, அதே கடற்கரையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததை கண்டிக்கிறேன். ருத்ர தாண்டவம் படம் வெளியானதற்கு பின், கிரிப்டோ கிறிஸ்துவர்கள் குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஹிந்து தாழ்த்தப்பட்ட மக்களின் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
![]()
|
உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., வெளிப்படையாக கிறிஸ்துவ மதப் பிரசாரம் செய்து வருகிறார். அவர் ஹிந்து என சான்றிதழ் வைத்துள்ளார். இது ஒரு கிரிமினல் குற்றம். மிகப் பெரும் மோசடி. அரசு துறையிலும் ஹிந்து சான்று மூலம் ஊடுருவி உள்ள பிற மதத்தவர்களை நீக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.