பொது செய்தி

இந்தியா

காந்தி படத்தை அகற்றுங்க., காங் எம்.எல்.ஏ., சொல்கிறார்; ஊழலில் புரளும் 500, 2000

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
கோடா: 'லஞ்சம், ஊழலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் இருந்து மஹாத்மா காந்தி படத்தை நீக்க வேண்டும்' என பிரதமர் மோடிக்கு, ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., கடிதம் எழுதியுள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தின் சங்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பரத் சிங் குண்டன்பூர். மஹாத்மா காந்தியின் 152வது பிறந்த தினம் சமீபத்தில்
Mahatma Gandhi, RS 2000 notes, PM Modi, Congress MLA

கோடா: 'லஞ்சம், ஊழலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் இருந்து மஹாத்மா காந்தி படத்தை நீக்க வேண்டும்' என பிரதமர் மோடிக்கு, ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., கடிதம் எழுதியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சங்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பரத் சிங் குண்டன்பூர். மஹாத்மா காந்தியின் 152வது பிறந்த தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பிரதமர் மோடிக்கு, பரத் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலை நாடு முழுதும் உள்ளது. மக்களும் லஞ்சம் கொடுத்து காரியங்கள் நிறைவேற்ற பழகிவிட்டனர். கடந்த 2019 ஜன.1ம் தேதி முதல், 2020 டிச.31 வரை 616 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது தினமும் இரண்டு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


latest tamil newsலஞ்சமாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் தான் அதிகளவில் கொடுக்கப்படுகின்றன; இது, ரூபாய் நோட்டுகளில் உள்ள மஹாத்மா காந்தி படத்துக்கு செய்யும் அவமரியாதை என்று தான் கூற வேண்டும். அதனால் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் மஹாத்மா காந்தி படத்தை நீக்க வேண்டும். அதேபோல் அசோக சக்கரத்தின் படத்தையும் நீக்க வேண்டும்.

ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் 5, 10, 20, 50, 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளில் மட்டும் மஹாத்மா காந்தி படத்தை அச்சடித்தால் போதும். இது தான் மஹாத்மாவுக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
08-அக்-202118:14:03 IST Report Abuse
NicoleThomson ஸ்வீட் பாக்ஸ் , லட்டு என்று படத்தை போட்டால் வசதியா இருக்கும்
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
08-அக்-202118:09:31 IST Report Abuse
krishnamurthy ஆம் காந்தியின் படம் எல்லாவற்றிலிருந்தும் நீக்கப்பட்டால் ஊழல் மிகவும் குறையும்
Rate this:
Cancel
08-அக்-202116:37:15 IST Report Abuse
theruvasagan காந்தி படம் வேணாம்னா வேற யார் படத்த போடறது. ஆனா ஒண்ணு. படத்த பார்த்தா மன உறுத்தலோ தயக்கமோ கூச்சமோ பயமோ வரக்கூடாது. நெஞ்சுக்கு நியாயமா தெரியணும். யோசிச்சு பாருங்க. அந்த மாதிரி ஃபீலிங் வரக்கூடிய படம் எங்கிட்டு இருக்கும்னு உங்களுக்கே நிச்சயம் தெரியவரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X