இந்தியாவின் பதிலடியால் வழிக்கு வந்த பிரிட்டன்: இந்தியர்களுக்கு அனுமதி

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
லண்டன்: தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் வரும் இந்தியர்களுக்கு ஆர்.டி - பி.சி.ஆர்., சோதனை, தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதே கட்டுப்பாடுகளை பிரிட்டன் பயணிகளுக்கு இந்தியா அமல்படுத்தியதும், தற்போது 2 டோஸ் கோவிஷீல்ட் போட்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது என இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் தெரிவித்துள்ளார்.கோவிட் காரணமாக
No quarantine, vaccinated Indians, UK, India

லண்டன்: தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் வரும் இந்தியர்களுக்கு ஆர்.டி - பி.சி.ஆர்., சோதனை, தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதே கட்டுப்பாடுகளை பிரிட்டன் பயணிகளுக்கு இந்தியா அமல்படுத்தியதும், தற்போது 2 டோஸ் கோவிஷீல்ட் போட்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது என இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் தெரிவித்துள்ளார்.

கோவிட் காரணமாக வெளிநாட்டு பயணங்கள் சிக்கலானதாக மாறியுள்ளது. பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், விமானப் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஒரு ஆர்.டி - பி.சி.ஆர்., பரிசோதனை, பிரிட்டன் சென்று இறங்கியதும் மீண்டும் ஒரு பரிசோதனை 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல், அதில் 8-வது நாள் ஒரு ஆர்.டி - பி.சி.ஆர்., சோதனை செய்து முடிவுகளை சமர்பிக்க வேண்டும் என கூறியிருந்தனர். இது பயணிகளுக்கு செலவை அதிகரிப்பதோடு, கடும் சிரமத்தையும் உண்டாக்கியது. கோவிஷீல்ட் தடுப்பூசி முழுமையாக போட்டிருந்தாலும் அதனை ஏற்க மறுத்தது பிரிட்டன்.


latest tamil news



பேசிப் பார்த்துப் பலனளிக்காத நிலையில் இந்தியா அதிரடி முடிவெடுத்தது. இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகளுக்கு அவர்கள் பிரிட்டன் பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய வம்சாவளியினராகவே இருந்தாலும், விமானம் ஏறுவதற்கு முன்பு ஆர்.டி - பி.சி.ஆர்., பரிசோதனை, வந்திறங்கியதும் பரிசோதனை, 8-வது நாள் பரிசோதனை 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் என அறிவித்தது. அக்., 4லிருந்து அதனை செயல்படுத்தவும் தொடங்கியது.

இந்நிலையில் வியாழனன்று இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அக்டோபர் 11 முதல் கோவிஷீல்ட் அல்லது பிரிட்டனால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக பெற்ற இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது.” என கூறியுள்ளார். மேலும் “நிலைமையை புரிந்துகொள்வோம், சிக்கலான விஷயத்தை தீர்ப்போம், அமைதியான, நிதானமான விவாதம் மூலம் ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்ப்போம்.” என்ற வாசகத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anvardeen - chennai,இந்தியா
11-அக்-202108:46:31 IST Report Abuse
Anvardeen சிங்கப்பூர் அரசாங்கம் உலகில் உள்ள எல்லா நாடுகளையும் .. உள்ளே அனுமதிக்கிறது இந்தியாவதை தவிர ... இந்தியன் அரசு என்ன செய்ய போகிறது எப்போ எப்போ எப்போ
Rate this:
sankar - Nellai,இந்தியா
12-அக்-202120:36:41 IST Report Abuse
sankarவழிக்கு கொண்டுவரப்படும்...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-அக்-202119:01:32 IST Report Abuse
M  Ramachandran முதுகெலும்பு உள்ள மத்திய அரசு. இங்கே சில கிணற்று தவளைகள் விடியல் அரசு தவிர வேறு அரசு இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிறது. அதன் மூளையில் அடிமை என்று நன்றாக ஊற்றி விட்டது. அதை மாற்ற முடியாது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-அக்-202118:59:37 IST Report Abuse
M  Ramachandran முதுகெலும்பு உள்ளன அரசு. இங்கே சில கிணற்று தவளைகள் விடியல் அரசு தவிர வேறு அரசு இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூளையில் அடிமை என்று நன்றாக ஊற்றி விட்டது. அதை மாற்ற முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X