எல்லை தாண்டிய ஆயுத 'சப்ளை': ஐ.நா.,வில் இந்தியா கவலை

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
நியூயார்க்: ''கடத்தல் ஆயுதங்கள் உதவியால் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி நடத்தும் தாக்குதலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,'' என, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சட்ட விரோதமாக கடத்தப்படும் சிறிய ஆயுதங்களை தடுப்பது தொடர்பான விவாதம் நடந்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதர்
UN, India, Weapon Supply, United Nations, எல்லை, ஆயுதம் சப்ளை, இந்தியா, ஐநா

நியூயார்க்: ''கடத்தல் ஆயுதங்கள் உதவியால் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி நடத்தும் தாக்குதலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,'' என, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சட்ட விரோதமாக கடத்தப்படும் சிறிய ஆயுதங்களை தடுப்பது தொடர்பான விவாதம் நடந்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:பயங்கரவாதிகளும், பயங்கரவாத குழுக்களும் சட்ட விரோதமாக சிறிய மற்றும் இலகு ரக ஆயுதங்கள், வெடி பொருட்கள் ஆகியவற்றை கடத்துகின்றனர். இந்த ஆயுதங்கள் உதவியால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களால் பல ஆண்டுகளாக இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது.பயங்கரவாதிகள் எல்லை தாண்டி சட்ட விரோத ஆயுதங்களை கடத்தி வந்து தாக்குதல் நடத்துகின்றனர். தற்போது ஆயுதங்களை கடத்த, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் பயன்படுத்தப்படுகிறது.


latest tamil news


பயங்கரவாத அமைப்புகள் ஆயுதங்கள் குவித்து வருவது அதிகரித்துள்ளது. அரசு ஆதரவில்லாமல் பயங்கரவாதிகள் ஆயுதங்களை சுலபமாக கடத்த முடியாது.எனவே பயங்கரவாதச் செயல்களைச் செய்வோர், அவர்களின் சட்டவிரோத ஆயுத சேமிப்பிற்கு உதவி புரிவோர் ஆகியோர் மீது சிறிதளவும் கருணை காட்டாமல் இந்த கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத ஆயுத கடத்தல் உலகளவில் கவலைக்குரியதாக உள்ளது. இந்த சபை ஏற்கனவே சட்ட விரோத ஆயுதக் கடத்தலை தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதை உறுப்பு நாடுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


பாக்., வேஷம்



ஐ.நா., பொதுச் சபையில் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான கூட்டத்தில் மீண்டும் காஷ்மீர் பிரச்னையை பாக்., எழுப்பியது. இதை கண்டித்து ஐ.நா.,விற்கான இந்திய துாதுக் குழுவின் சட்ட ஆலோசகர் டாக்டர் காஜல் பத் பேசியதாவது:மீண்டும் காஷ்மீர் பிரச்னையை கூறி, இந்த மன்றத்தின் மாண்பை பாக்., குறைத்துள்ளது.

பாக்., திரும்ப திரும்ப பொய் பேசி வருகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மிகப் பெரிய அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாக்., பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவதாக வேஷம் போடுகிறது.இந்த மன்றத்தில், இந்தியா மீது சுமத்திய புகார்கள் அனைத்தையும் நிராகரிக்கிறோம். பாக்., உரையில் எங்கெங்கு இந்தியாவின் பெயர் உள்ளதோ அவையெல்லாம் நீக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-அக்-202113:09:26 IST Report Abuse
அப்புசாமி காஷ்மீர் பிரச்சனையை ஐ.நாவுக்கு எடுத்துட்டுப் போனாருன்னு கேலி பண்ணவங்க இன்னிக்கி காஷ்மீரில் யாராவது முக்குனா, தும்முனா கூட ஐ.நா வுல கவலை தெரிவிப்பாங்க. இவிங்க செஞ்சா சர்... நேரு செஞ்சிருந்தா தப்பு. சரியா சங்கீஸ்...
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
11-அக்-202113:49:14 IST Report Abuse
Paramanஆகாஆகா அப்பு, அறிவுக்கொழுந்தே நீயெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே அல்ல ஆனா பாரு உன் தீயமூக்கா இத்தாலி கான் கிரேஸ் மங்கி தனத்தால் நீ அந்த பயலுக்கு முட்டுக்கொடுக்கும் சாக்கில் ஒரு விஷயத்தையே மறந்துவிட்ட வசதியா உன் நேருகான் இந்த விஷயத்தை ஐநாவிற்க்கு கொண்டு சென்றதால் தான் உன்னைய மாதிரி கண்டவனும் இந்த காஷ்மீர் பிரச்சினையை பற்றி இன்னைக்கு ஐநாவில் பேசுறான், இந்தியாவும் அதற்க்கு பதிலடி கொடுக்கும்படி ஆகுது என்பது உன் ₹200. ஊவா மங்கீஸ் மூளைக்கு புரியாது...
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
08-அக்-202112:01:21 IST Report Abuse
Paraman இந்த திருமூர்த்தி ஒரு தயிர்சோறு இப்பிடி நாணி கோணி அடுத்தவனுக்கு வலிக்காம பேசினா எவனுக்கு புரியும்? எவன் கேப்பான்?? ஐநா சபை கட்ட பஞ்சாயத்து ரௌடிஸ் எல்லாம் நம்ம தீயமூக்கா ஓசி பிரியாணி அடிமைகள் மாதிரி டெய்லி பேட்டா வாங்கி. சாரயத்த அடிச்சுட்டு சௌண்டு விட்டு பிறகு அப்பிடியே மட்டையாகிடுவாநுங்கோ அவனுகள தெளியவெச்சி அடிச்சி சொன்னா தான் கொஞ்சமாவது அவனுக மர மண்டையில் ஏறும்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
08-அக்-202110:10:10 IST Report Abuse
jayvee ஐநா சபை இனி 'அகில உலக கட்டை பஞ்சாயத்து சபை' என்றுதான் அழைக்கப்படவேண்டும். அதுபோல உலக சுகாதார மய்யம் இனி 'சீன கம்யூனிச உலக சுகாதார மய்யம்' என்று பெயர்மாற்றப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X