பெரிய பொருளாதார மேதை நீங்கள். உங்களாலும் இதற்கு தீர்வு சொல்ல முடியவில்லை

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (19) | |
Advertisement
பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை: பெட்ரோலிய பொருட்களின் விலையில் மேலும் உயர்வு ஏற்பட்டுள்ளது நேர்மையான மக்களுக்கு வேதனையாக இருக்கும். இது நாட்டின் பொருட்கள் தேவையை பலவீனமாக்கி பொருளாதார மீட்சியை மேலும் சிக்கலாக்கி விடும்.என்ன சார் செய்வது... பெரிய பொருளாதார மேதை நீங்கள். உங்களாலும் இதற்கு தீர்வு சொல்ல முடியவில்லை; சொன்னாலும் கேட்க மோடி அரசு தயாரில்லை.
பெரிய பொருளாதார மேதை நீங்கள். உங்களாலும் இதற்கு தீர்வு சொல்ல முடியவில்லை

பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை: பெட்ரோலிய பொருட்களின் விலையில் மேலும் உயர்வு ஏற்பட்டுள்ளது நேர்மையான மக்களுக்கு வேதனையாக இருக்கும். இது நாட்டின் பொருட்கள் தேவையை பலவீனமாக்கி பொருளாதார மீட்சியை மேலும் சிக்கலாக்கி விடும்.


என்ன சார் செய்வது... பெரிய பொருளாதார மேதை நீங்கள். உங்களாலும் இதற்கு தீர்வு சொல்ல முடியவில்லை; சொன்னாலும் கேட்க மோடி அரசு தயாரில்லை. காங்., ஆட்சியில் பெட்ரோலிய நிறுவனங்களிடம் விலை நிர்ணயம் ஒப்படைக்கப்பட்டது; அப்படியே தொடர்கிறது!தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா அறிக்கை: 'கடவுளை நம்பியவன் காட்டுமிராண்டி என எழுதப்பட்டுள்ளதை முதலில் அழியுங்கள். இல்லையேல், நாங்கள் அழிப்போம். இந்த எதிர்வினை வெறும் மாதிரி தான். இன்னும் கடுமையாகும்.


மிரட்டலால் எதுவும் நடக்காது. சட்டத்தின் ஆட்சி தான் இங்கு நடக்கிறது. அதனால், சட்ட நடவடிக்கை எடுத்து, எல்லா பிரச்னைக்கும் தீர்வு காணுவோமே!தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை: தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் தொடங்கியிருப்பதால் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


latest tamil news
ஏற்கனவே கொள்முதல் செய்த நெல், இன்னமும் வீதியில் தான் கிடக்கிறது; மழையில் முளைத்து வருகிறது. அதற்கு வழி காணாமல் கூடுதல் நிலையங்களை திறப்பார்களா?பா.ஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு அறிக்கை: சில கோழைகள் எதிர்பார்ப்பது போன்ற வார்த்தைகளை நான் பேச மாட்டேன். இந்த நாட்டின் குடிமகளாக என் மனதில் தோன்றுவதை பேசத் தான் செய்வேன். என் கட்சியையும் தலைமையையும் மதிக்கிறேன்; பிரதமர் மோடியை நம்புகிறேன். அவரால் தான் இந்தியா பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் உள்ளது.


நல்லவேளையாக புரியும்படி சொன்னீர்கள்... இப்படி விளக்கமாக அறிக்கை விட்டால் தானே, இப்போதைக்கு நீங்கள் கட்சி தாவப் போவதில்லை என்பது விளங்குகிறது!காங்., தேசிய செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி அறிக்கை: சமையல் காஸ் சிலிண்டர் விலை, மேலும் 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்திய மக்களுக்கு பாராட்டுகள்... பிரதமர் மோடி ஏற்கனவே, 'முத்ரா' என்ற சிறு கடன் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்த கடனை இப்போதோ அல்லது விரைவிலேயே இந்திய மக்கள் பெறுவர் என்ற நம்பிக்கை மோடிக்கு உள்ளது.


அப்படியாவது ஏழை மக்கள் கடன் பெற, 'முத்ரா' திட்டமாவது இருக்கிறதே. காங்., கூட்டணி ஆட்சியில் எந்த திட்டமும் இன்றி, கூட்டணி கட்சிகளால் மக்கள் மொட்டை தானே அடிக்கப்பட்டனர்?


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
10-அக்-202107:33:22 IST Report Abuse
Sai காங்., ஆட்சியில் பெட்ரோலிய நிறுவனங்களிடம் விலை நிர்ணயம் ஒப்படைக்கப்பட்டது அப்படியே தொடர்கிறது என்பீர்களானால் அ ந்த அதிகாரத்தை மோடி அரசால் திரும்பப் பெற முடியவில்லையோ? அதென்ன கட்சத் தீவு போன்ற தீர்க்க முடியாத பிரச்சினையா என்ன?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-அக்-202117:04:31 IST Report Abuse
vbs manian ஸ்வாமி ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து தன் கருத்துகளை எவ்வளவு வரவேற்பு என்று பார்க்கலாம். அழையா விருந்தாளியாக இவர் பி ஜெ பி யில் இருக்க வேண்டாம்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
08-அக்-202113:58:33 IST Report Abuse
Vena Suna எல்லோரும் பைக்,கார் பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தில் செல்லுங்கள்.பெட்ரோல் விலை கம்மி ஆகிறதா இல்லையா என்று பாருங்கள்.
Rate this:
08-அக்-202116:43:42 IST Report Abuse
அப்புசாமிவிசு ஐயர் வாள்... அய்யய்யோ... அப்புறம் கார், பைக் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் என்ன ஆவது? ரிலையன்ஸ் பெட்ரோலிய ஆளுங்க ஏழையாயிடுவாங்களே... சவூதி 15 பில்லியன் டாலர் இங்கே முதலீடு செஞ்சிருக்கே? ஏழைங்க கஷ்டப்படலாம். ஏழைப்பங்காளரும், அவரை நம்பியிருக்கும் கார்ப்பரேட்களும் கஷ்டப்படலாமா?...
Rate this:
08-அக்-202116:44:02 IST Report Abuse
அப்புசாமிPLEASE DON'T REPEAT THE SAME COMMENT...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X