தமிழ்நாடு

போலி மினரல் வாட்டர் விற்பனை: நோய் பரவும் அபாயம் காத்திருப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
கரூர்: கேனில் போலி மினரல் வாட்டர் விற்பனை ஜோராக நடந்து வருவதால், பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.கரூர் மாவட்டத்தில், போதிய மழையில்லாததாலும் நிலத்தடி நீர் மாசு ஆகியவற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மினரல் வாட்டருக்கு மவுசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம், போலி மினரல் வாட்டர் கம்பெனிகள் பெருமளவில் முளைத்துள்ளன. இதில், கரூரில் ஐ.எஸ்.ஐ.,

கரூர்: கேனில் போலி மினரல் வாட்டர் விற்பனை ஜோராக நடந்து வருவதால், பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.


கரூர் மாவட்டத்தில், போதிய மழையில்லாததாலும் நிலத்தடி நீர் மாசு ஆகியவற்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மினரல் வாட்டருக்கு மவுசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம், போலி மினரல் வாட்டர் கம்பெனிகள் பெருமளவில் முளைத்துள்ளன. இதில், கரூரில் ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற வாட்டர் கம்பெனிகள், மூன்றுக்கு மேற்பட்டவை மட்டுமே உள்ளன. ஆனால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலியான மினரல் வாட்டர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பிரபல கம்பெனிகளின் வாட்டர் கேன்களில், சுகாதாரமற்ற தண்ணீரை அடைத்து விற்பதும் ஆங்காங்கே நடக்கின்றன. போலி கம்பெனிகளின் தண்ணீரை அருந்துவதன் மூலம், மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இது குறித்து, மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: மினரல் வாட்டர் நிறுவனங்கள், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் எனப்படும் ஆர்.ஓ., முறையில் நீரை சுத்திகரித்து விற்பனைக்கு அனுப்புகின்றன. இதன் மூலம் குடிநீரில் பாக்டீரியா, உலோகம், உப்புக்கள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்படுகின்றன. இது மட்டுமின்றி மினரல் வாட்டர் கேன்களுக்கு, ஐ.எஸ்.ஐ., முத்திரை தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். இதற்கு உரிமக்கட்டணம், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி பெறவேண்டும். பின், நிறுவனங்களில் லேப் அமைத்து வாரந்தோறும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பரிசோதிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை, ஐ.எஸ்.ஐ., அங்கீகாரம் உள்ள சோதனை கூடத்தில், இங்கு சுத்தம் செய்யப்பட்ட குடிநீரை, பரிசோதனைக்கு அனுப்பி சான்று வாங்க வேண்டும். இந்த அறிக்கைகள் மாதந்தோறும், அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. லேப் அமைக்க மற்றும் டெக்னீஷியனுக்கு ஊதியம் போன்றவைகளுக்கு ஒரு நிறுவனத்திற்கு, குறைந்தபட்சம் மாதத்திற்கு, ஆறு லட்சம் ரூபாய் செலவாகிறது. ஆனால் போலி நிறுவனங்கள், தரமற்ற ஆர்.ஓ. பிளாண்ட் மூலம், தண்ணீரை சுத்தம் செய்கின்றன. சுத்தம் செய்யப்பட்ட குடிநீரை, எந்த பரிசோதனையும் செய்யாமல், கேனில் அடைத்து விற்பனை செய்கின்றனர். 20 லிட்டர் கொண்ட கேன், 20 ரூபாயிலிருந்து, 35 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். ஆனால் பிரபல நிறுவனங்களின் தயாரிப்பு கேன்கள், 40 முதல், 60 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. குறைந்த விலையில் இருப்பதால், போலி வாட்டர் கேன்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. போலி நிறுவனங்கள் கேன்களை முறையாக சுத்தம் செய்வதில்லை. இதனால், பல்வேறு கிருமிகள் சிலிண்டரில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. சுத்தம் செய்யப்படாத கேன்களில் நிரப்பப்படும் நீரை குடிக்கும் போது, நோய் தொற்ற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X