திருமலையில் பிரம்மோற்சவ விழா துவங்கியது

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருமலை திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது கொரோனா காரணமாக பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள்ளேயே சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.திருமலை திருப்பதியில் நடைபெறும் விழாக்களிலேயே பிரம்மாண்டமான விழா பிரம்மோற்சவ விழாவாகும்.ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலையிலும் இரவிலும் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் விதம் விதமான
திருமலையில் பிரம்மோற்சவ விழா துவங்கியது


திருமலை திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது கொரோனா காரணமாக பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள்ளேயே சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.
திருமலை திருப்பதியில் நடைபெறும் விழாக்களிலேயே பிரம்மாண்டமான விழா பிரம்மோற்சவ விழாவாகும்.ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலையிலும் இரவிலும் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் விதம் விதமான வாகனத்தில் எழுந்தருளுவர்.
சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளும் சுவாமியைக் காண பல லட்சம் பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வருகைதருவர்.கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக சுவாமி மாடவீதிகளில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவிலுக்கு உள்ளே உள்ள மண்டபத்தில் மட்டுமே எழுந்தருளுகிறார்.
இந்த நிகழ்வின் போது கோவில் பட்டாச்சாரியார்கள் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.
நேற்று மாலை கொடியேற்றமும் இரவு பெரிய சேஷ வாகனமும் இன்று காலை சின்ன சேஷ வாகத்திலும் பெருமாள் எழுந்தருளினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X