ஷாருக்கான் மகனின் ஜாமின் மனு தள்ளுபடி

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், 23, தன் நண்பர்கள் ஏழு பேருடன் அந்த கப்பலில் பயணித்தார். அவர்களிடம் இருந்து விலை
ஷாருக்கான், ஆர்யன்கான், ஜாமின், மனு, தள்ளுபடி, shahrukhan, aaryankhan, bail.

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், 23, தன் நண்பர்கள் ஏழு பேருடன் அந்த கப்பலில் பயணித்தார். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த பல்வேறு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து ஆர்யன் மற்றும் அவரது நண்பர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.


latest tamil news



போலீஸ் காவல் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேர் மும்பை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


latest tamil news


இந்நிலையில், ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandian - Boston,யூ.எஸ்.ஏ
13-அக்-202118:17:33 IST Report Abuse
Pandian அப்பனை கமெர்ஷியல் விளம்பரத்தில் நடிக்க வைக்க கார்பொரேட் இங்கு துன்னை போகும் ஒன்றிய அரசு , கான் இஸ்லாமியர் எனபதால்.
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
09-அக்-202100:45:50 IST Report Abuse
LAX சிறை னா..?? இவனுக்கு Air Conditioner Facility உண்டுதானே..?
Rate this:
Cancel
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம் பரவாயில்லை. சிலசமயங்களில் நீதி, தான் இன்னமும் உயிருடன் இருப்பதை உறுதி செய்கிறது. வாழ்த்துக்கள் நீதிபதிக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X