பொது செய்தி

தமிழ்நாடு

சினிமா பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை : சினிமா பாடலாசிரியர் பிறைசூடன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65. 400க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் அதிகமான சினிமா பாடல்களையும், 5000 பக்தி பாடல்களையும் இவர் எழுதி உள்ளார். சிறந்த ஆன்மிகவாதியும், இலக்கியவாதியுமாக திகழ்ந்த இவர் நடிகராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி உள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Piraisoodan, RIPKavignarPiraisoodan, RIPPiraisoodan,

சென்னை : சினிமா பாடலாசிரியர் பிறைசூடன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65.

400க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் அதிகமான சினிமா பாடல்களையும், 5000 பக்தி பாடல்களையும் இவர் எழுதி உள்ளார். சிறந்த ஆன்மிகவாதியும், இலக்கியவாதியுமாக திகழ்ந்த இவர் நடிகராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி உள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 1956ம் ஆண்டு பிப்ரவரி 06ம் தேதி பிறந்தவர் பிறைசூடன். தனது பள்ளிப் பருவத்திலேயே கவியரங்கம், பட்டி மன்றம் என்று தனது பேச்சு திறமையை இயல்பாகவே வளர்த்துக் கொண்டவர். தனக்குள் உள்ள கவிதை புனையும் திறமையைக் கொண்டு சினிமாவில் நுழைய முற்பட்டு பல போராட்டங்களுக்குப் பின், ஆனந்தி பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 1984ல் வெளிவந்த "சிறை" என்ற படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாக பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார். "ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்" என்ற பாடல் தான் இவர் எழுதிய முதல் பாடல்.

தொடர்ந்து நடந்தால் இரண்டடி, ஆட்டமா தேரோட்டமா, சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது.. உட்பட ஏராளமான பாடல்களை இவர் எழுதி உள்ளார். ஏழு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளை கொண்ட கவிஞர் பிறைசூடனின் சகோதரர்களில் ஒருவர் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ஆர்.மதி என்பது குறிப்பிடதக்கது. இவரது மகன் கே.ஆர்.கவின் சிவாவும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தனது தொழிலில் சற்றும் சமரசம் செய்து கொள்ளாதவர். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையமைப்பில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு எண்ணற்ற இனிமையான பாடல்களை தந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, ஆதித்யன் என பல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்துள்ளார்.


latest tamil news"குரோதம்-2", மற்றும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்து வெளிவந்த படங்களான "சத்திரிய தர்மம்", "சங்கர்", "ஸ்ரீராம ராஜ்ஜியம்" போன்ற படங்களுக்கு வசனகர்த்தாகவும் பணிபுரிந்திருக்கின்றார். சதுரங்க வேட்டை, "புகழ்" ஆகிய படங்களின் மூலம் தன்னை ஒரு நடிகராகவும் காட்டிக் கொண்டவர் பிறைசூடன்.

"விழுதுகள்", "மங்கை", "பல்லாங்குழி", மாயா மச்சீந்திரா, "ஆனந்தம்", "அக்னி பிரவேசம்", "ரேகா ஐ பி எஸ்", "அவளுக்கென்று ஓர் மனம்" மற்றும் "உயிரின் நிறம் ஊதா" போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

பன்முகத் தன்மை வாய்ந்த கவிஞர் பிறைசூடன் ஏறக்குறைய 400 திரைப்படங்களில் 1500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியிருக்கின்றார். இதுதவிர 5000 பக்திப் பாடல்களும் எழுதியுள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் பிறசைூடன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
umari siva - tambaram,இந்தியா
12-அக்-202113:53:35 IST Report Abuse
umari siva கண்ணதாசனின் படைப்புக்களை, அதன் அர்த்தங்களை ஊரறிய சொன்ன உத்தமர் மறைந்து விட்டார். இறைவா அவர் ஆன்மாவுக்கு சாந்தி கொடு.
Rate this:
Cancel
shiva Kumar - TIruvarur,மாலத்தீவு
09-அக்-202110:12:19 IST Report Abuse
shiva Kumar எங்கள் ஊர் கவிஞர், எல்லாம் வல்ல இறைவா, இவர் ஆன்மா சாந்தியடையட்டும்
Rate this:
Cancel
Er K.R.Sashi kanth - JP ngr phase6, BLR,இந்தியா
09-அக்-202102:58:23 IST Report Abuse
Er K.R.Sashi kanth Oh Shocking news A great Tamil poet and love to hear about his style of expressing the songs and its inner meanings written by various writers Om shanti
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X