பொது செய்தி

தமிழ்நாடு

லஞ்ச புகாரில் சிக்கிய முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அசோகன் சொத்து மதிப்பு ஆய்வு

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வேலுார்:லஞ்ச புகாரில் சிக்கிய முன்னாள் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அசோகன் வீட்டில் கைப்பற்றிய சொத்து பத்திரங்களின் மதிப்பை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், மேலஎருக்காட்டூரை சேர்ந்தவர் அசோகன். இவர் புதுக்கோட்டை மாவட்ட அரசு கலைக்கல்லுாரியில் வணிகவியல் பேராசிரியராக 2000ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.அ.தி.மு.க.,

வேலுார்:லஞ்ச புகாரில் சிக்கிய முன்னாள் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அசோகன் வீட்டில் கைப்பற்றிய சொத்து பத்திரங்களின் மதிப்பை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.



latest tamil news


திருவாரூர் மாவட்டம், மேலஎருக்காட்டூரை சேர்ந்தவர் அசோகன். இவர் புதுக்கோட்டை மாவட்ட அரசு கலைக்கல்லுாரியில் வணிகவியல் பேராசிரியராக 2000ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.அ.தி.மு.க., ஆட்சியில் சசிகலா செல்வாக்கினால் வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2013 ம் ஆண்டு நவ., மாதம் 23 ம் தேதி முதல் 2017 பிப் 20ம் ததி வரை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பணியில் சேர்ந்தார்.

அப்போது இவர் பதிவாளர், நிதி அலுவலராக தற்காலிக பொறுப்பில் இருந்துள்ளார். சில நாட்கள் மட்டும் துணை வேந்தர் பொறுப்பிலும் இருந்துள்ளார். அப்போது பல்வேறு மோசடிகளில் இவர் ஈடுபட்டுள்ளதாக 30 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.இதனால் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொருப்பில் இருந்து 2017 ம் ஆண்டு பிப்., 20 ம் தேதி அவர் விடுவிக்கப்பட்டு திருவாரூர் அரசு கல்லுாரியில் பேராசிரியராக 25 ம் தேதி சேர்ந்தார். மோசடி புகார்கள் குறித்து விசாரிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் 28 ம் தேதி ஓய்வு பெறும் நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதன் பிறகு காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள பங்களாவில் இரண்டாவது மனைவி ரேணுகாதேவியுடன் வசித்து வந்தார். வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், அசோகனும், அவரது இரண்டாவது மனைவி ரேணுகாதேவி ஆகியோர் பெயர்களில் வருமானத்திற்கு அதிகமாக 53 லட்சத்து 50 ஆயிரத்து 818 ரூபாய், 63 சதவீதம் சொத்து சேர்த்தது உறுதியானது. இதையடுத்து அசோகன், ரேணுகாதேவி மீது கடந்த 4 ம் தேதி போலீசார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கு பிறகு தான் காட்பாடி வி.ஜி.ராவ் நகர், மேல எருக்காட்டீரில் போலீசார் சோதனை நடத்தி பணம், நகை, சொத்து பத்திரங்களை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் கூறியதாவது: அசோகன் மேலஎருக்காட்டூரில் 2 கோடி ரூபாயில் சொகுசு பங்களா, பருத்தியூர், கண்கொடுத்த வனிதம், தஞ்சாவூரில் விவசாய நிலங்களை வாங்கி குவித்துள்ளார்.
முதல் மனைவி வசந்தகுமாரிக்கு கருரில் 5 கோடி ரூபாயில் சொகுசு பங்களா கட்டி கொடுத்துள்ளார்.

பதவியில் இருக்கும் போது தங்க நகைகள், வெள்ளி கட்டிகளாக வாங்கியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்காலிக முதல்வராக பன்னீர்செல்வம் பதவி ஏற்ற போது, கூவத்துார் பங்களாவில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ., க்கள் தங்க வைக்கப்பட்ட போது அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.அசோகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து பத்திரங்களை மதிப்பிடும் பணிகள் நடந்து வருகிறது. பினாமி முறையில் சொத்துக்கள் உறவினர்கள், நண்பர்கள் பெயரில் உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


இவர் புதுக்கோட்டை மாவட்ட அரசு கலைக்கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றிய போது, அங்கு டிவிசன் மையம் நடத்தி வந்த வசந்தகுமாரியை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் திருவாரூர் திரு.வி. க., அரசு கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
அதே கல்லுாரியில் அசோகன் பணியாற்றிய போது அவரிடம் படித்த மாணவி ரேணுகாதேவியுடன் தொடர்பு ஏற்பட்டதில் அவர் கர்ப்பமானார்.

முதல் மனைவி எதிர்பால் அவரை திருமணம் செய்ய மறுத்தார். ஆனால் பெற்றோர், மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் வேறு வழியின்றி ரேணுகாதேவியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக துரைமுருகன் இருந்த போது தான் திருவள்ளுவர் பல்கலைகச்கழகத்தை வேலுாருக்கு கொண்டு வந்தார். ஆரம்பத்தில் வேலுார் கோட்டையில் வாடகை கட்டிடத்தில் பல்கலை இயங்கியது. பின் துரைமுருகன் முயற்சியால் நிதி ஒதுக்கப்பட்டு அவரது காட்பாடி தொகுதியான சேர்க்காட்டில் சொந்த கட்டிடம் கட்டி அங்கு மாற்றப்பட்டது.


latest tamil news


பின் எதிர் கட்சியாக தி.மு.க., இருந்த போது, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மோசடிகள் குறித்து அவரது கவனத்திற்கு வந்தது. இதனால் சட்டசபை கூட்டத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மோசடிகள் குறித்து கூறினார். ஆனால் அப்போதிருந்த அ.தி.மு.க., அரசு அதை கண்டுகொள்ளவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
08-அக்-202121:06:49 IST Report Abuse
Vena Suna பல நாடுகளில் லஞ்சத்திற்கு மரண தண்டனை,இங்கும் வர வேண்டும் .
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
08-அக்-202119:40:48 IST Report Abuse
NicoleThomson இவனால் எத்துணை பேருக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கும் , பாவி இவனுக்கு தண்டனை என்பது மிகப்பெரிய மனஉளைச்சல்தான் , எப்படி ஏற்படுத்துவார்கள் என்று பாப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X